அணைப்பகுதியில் அகற்றப்படாத அமலைச் செடிகள்! - விளைநிலங்களுக்குள் நீர் சூழ்ந்த அவலம்



தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தூத்துக்குடி மாவட்ட அணைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மருதுார் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் வயல்களுக்குள் புகுந்தது. 

Sponsored


மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள சேர்வலாறு, பாபநாசம், மணிமுத்தாறு, குண்டாறு உள்ளிட்ட 8 அணைகள் வேகமாக நிரம்பி வருகிறன. பாபநாசம் அணையிலிருந்து திறந்து  விடப்பட்டுள்ள தண்ணீரால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Sponsored


நெல்லை மாவட்டத்தைக் கடந்து, துாத்துக்குடி மாவட்டத்தில் சந்திக்கும் முதல் அணையான மருதுார் அணைக்கும், இரண்டாம் அணையான ஸ்ரீவைகுண்டம் அணைக்கும் வருகின்ற தண்ணீரால், இரு அணைகளும் நிரம்பிவிட்டன. இதனால், அதிகப்படியான தண்ணீர், மருதூர் அணையின் மேலக்கால் கீழக்கால் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணையின் வடகால் மற்றும் தென்கால் ஆகியவற்றின் வழியாக பாசனக் குளங்களுக்கு வெளியேற்றப்படுகிறது என ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார். 

Sponsored


இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து கடலுக்கு வீணாகத் தண்ணீர் கலப்பதால், அதைச் சாத்தான்குளம் பகுதிக்குச் செல்லும் சடையநேரி கால்வாய்க்கு திருப்பி விட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மாதம் துாத்துகுடி மாவட்டத்தில் கருகும் வாழைப் பயிர்களுக்காகப் பாபாநாசம் அணையிலிந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அப்போது, வந்த தண்ணீரில் மருதுார் அணையில் அதிக அளவில் அமலைச் செடிகள் ஆக்கிரமித்து அணையை நிரப்பி  இருந்தன. கடந்த மாதத்தில் மேய்ச்சலுக்குச் சென்று வீடு திரும்பிய சுமார் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் இந்த அமலைச் செடிகளில் சிக்கிப் போராடி மீட்கப்பட்டன. இதில், 5 மாடுகள் உயிரிழந்தன. 

இந்நிலையில், தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தண்ணீர் திறக்கப்பட்டதால், ஷட்டர்களில் ஏராளமான அமலைச்செடிகள் தேங்கியுள்ளது. இதனால் திறக்கப்பட்ட தண்ணீரில் பெரும்பகுதி அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ளது. இப்போதும் அணையில் கண்ணுக்கெட்டிய துாரம் வரையில் அமலைச் செடிகளே தேங்கியுள்ளன.  இந்த அமலைச்செடிகளை அகற்ற பொதுப்பணித் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், விளை நிலங்களைச்  சூழ்ந்த தண்ணீரால் நடவு செய்த வாழைக்கன்றுகள் முழுவதும் அபாயத்தில் இருப்பதாகவும் இப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
 



Trending Articles

Sponsored