`தயவு செய்து எங்கள் ஒருநாள் சம்பளத்தைப் பிடியுங்கள்' - கேரளாவுக்காகப் பழனிசாமியிடம் ஏங்கிய அரசு ஊழியர்கள்



Sponsored



தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் ஒருநாள் சம்பளத்தைக் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க உள்ளனர்.


 

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகள் இல்லாத அளவுக்குக் கனமழை பெய்து வருகிறது. அனைத்து மாவட்டங்களுமே வெள்ளத்தில் மிதக்கின்றன. ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்படுவதால் மக்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து முகாம்களில் தங்கி வருகின்றனர். மீட்புப் பணிகளில் முப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு கனமழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது. இந்தச் சூழலில் தமிழக மக்கள் கேரளாவுக்கு உதவுவதில் மிகுந்த முனைப்பு காட்டி வருகின்றனர். சமூக வலைதளம் வாயிலாகப் பலர் தங்களால் முடிந்த உதவியைக் கேரள முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்கு அனுப்பி வருகின்றனர். தமிழக அரசு ஊழியர்கள் தங்களின் ஒரு நாள் சம்பளத்தைப் நிவாரணத்துக்காக வழங்க முன்வந்துள்ளனர்.  

Sponsored



 

Sponsored


இதுகுறித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் இரா.சண்முகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  “தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள். அவர்கள் துயரத்தில் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் பங்கேற்கவும் உதவி செய்யவும் முடிவெடுத்துள்ளோம். அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் பொதுமக்களில் ஒரு பகுதி என்ற நிலையில் நிவாரண நிதியாக எங்களுடைய ஒரு நாள் ஊதியத்தைப் பிடித்தம் செய்து நிவாரண நிதியாக வழங்க உரிய ஆணை வழங்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட மூத்த சங்கம் என்ற முறையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் கேட்டுக்கொள்கிறது. இதற்கு முன் உதாரணமாகத் தமிழகத்தில் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் இதுபோன்று தங்கள் பங்களிப்பைச் செலுத்தியுள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். 
 



Trending Articles

Sponsored