`கொள்ளிடம் பாலம் எந்நேரத்திலும் இடிந்து விழலாம்!’- தமிழக அரசை எச்சரிக்கும் ஸ்டாலின்



`கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தை ராணுவ உதவியுடன் உடனடியாக சீரமைக்க வேண்டும்’ என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.


 

Sponsored


திருச்சி, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1924-ம் ஆண்டு, ஸ்ரீரங்கத்தையும், நெ.1 டோல்கேட் பகுதியையும் இணைக்கும் வகையில் இரும்புப் பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. ஆங்கிலேயர்  காலகட்டத்தில் அமைக்கப்பட்ட இந்தப் பாலம் மிகவும் பலவீனம் ஆகிவிட்ட காரணத்தால், கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டப்பட்டது. பழைய இரும்புப் பாலத்தின் மீது குறைந்த எடைகொண்ட வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்று வர அனுமதிக்கப்பட்டன. இந்த நிலையில், முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 50.000 கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கொள்ளிடம் இரும்புப் பாலத்தில் விரிசல் பெரிதாகியுள்ளது. 

Sponsored



 

Sponsored


கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கே.ஆர்.எஸ் அணைகளின் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீர், மேட்டூர் அணைக்கு வந்து அங்கிருந்து முக்கொம்பு மேலணை வழியாகக்  கல்லணைக்கு திறந்துவிடப்பட்டது. கடந்த 16-ம் தேதி கொள்ளிடம் ஆற்றில் 60,000 கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பழைய பாலத்தில் விரிசல் மேலும் அதிகரித்தது. இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொள்ளிடம் பழைய பாலத்தில் போக்குவரத்தைத் தடை செய்தனர். எந்த நேரத்திலும் இடிந்துவிழும் நிலையில் பழைய பாலம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


 

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ’கொள்ளிடம் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு எந்நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற நிலையில், போக்குவரத்தை மட்டும் தடை செய்துவிட்டு அ.தி.மு.க அரசு அமைதி காப்பது கண்டனத்திற்குரியது. மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் ராணுவ உதவியுடன் உடனடியாக பாலத்தை சீரமைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார். 

பொதுப்பணித்துறை சேதமடைந்துள்ள பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை அடுத்து, அங்கு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. பாலத்தின் அருகே மக்கள் செல்லக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது!



Trending Articles

Sponsored