மனதை மாற்றிய குழந்தை! - மறுநாளே தாலி கட்டிய காதலன்Sponsoredகுழந்தை பிறந்த பிறகு அரசு மருத்துவமனையில் வைத்து தன் காதலியைக் கரம்பிடித்துள்ளார் காதலன் ஒருவர்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையை அடுத்த சாத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அரி (22) கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி (20). இவர்கள் இருவரும் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 2 வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையே, இருவரும் நெருக்கமாகப் பழகியதில் ராஜலட்சுமி கற்பமாகியுள்ளார். இதனால் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அரியிடம் கேட்டுள்ளார். ஆனால், ராஜலட்சுமி மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், தங்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனக் காரணம் கூறி திருமணம் செய்ய அரி மறுத்து வந்துள்ளார். ஆனால், ராஜலட்சுமி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனாலும் மனம் மாறவில்லை அரி.

Sponsored


இதற்கிடையில் 'நீ இல்லை என்றால் என்ன, உன்னால் உருவான இந்த குழந்தையே எனக்குப் போதும். இந்தக் குழந்தையைப் பெற்றெடுத்து நான் வளர்த்துக்கொள்கிறேன். என் காதல் உண்மையானது. ஏமாற்றும் எண்ணத்தோடு பழகிவிட்டாயே'' எனக் கண்ணீர் மல்கக் கூறிவிட்டு ராஜலட்சுமி பிரிந்துவிட்டார். அதைத் தொடர்ந்து நிறைமாத கர்ப்பிணியான ராஜலட்சுமிக்கு நேற்று (17.08.2018) வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.

Sponsored


குழந்தை பிறந்த தகவல் அறிந்த அரி குழந்தையைப் பார்க்க வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு குழந்தையை பார்த்த பிறகு மனம் மாறி ராஜலட்சுமியை உடனடியாக திருமணம் செய்துகொள்வதாகக் கூறியுள்ளார். அதற்கு ஏற்றார்போல் உடனே மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிறிய பிள்ளையார் கோயில் முன்பு ராஜலட்சுமிக்குத் தாலி கட்டி திருமணம் செய்துகொண்டார். இந்நிகழ்வைப் பார்த்த பொதுமக்கள் மணமக்களை வாழ்த்தினர்.Trending Articles

Sponsored