`3.30 மணி நேரம்; 1,111 அம்புகள்!’ - 3 வயது குழந்தையின் கின்னஸ் சாதனை சாத்தியமானது இப்படித்தான்Sponsoredசென்னை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில், 3 வயதேயான சஞ்சனா என்ற சிறுமி 3.30 மணிநேரத்தில் 1,111 அம்புகளை எய்து கின்னஸ் சாதனை படைத்தார். சஞ்சனாவின் திறமையைக் கண்டு பலரும் வியந்துள்ளனர்.

அம்பு எய்தலில் கின்னஸ் சாதனை படைத்த, 3 வயது சிறுமி சஞ்சனா குறித்து அவரின் பயிற்சியாளர் ஷிஹான் ஹுசேனி கூறுகையில், ``சஞ்சனா சின்ன குழந்தையாக இருக்கும்போதே, பொம்மைகளை வைத்து விளையாடியதில்லை. வில் அம்புகளை வைத்தே விளையாடுவாள். இதைக்கண்ட அவளது பெற்றோருக்கு பெரும் ஆச்சர்யம். அவளது ஆர்வத்தையறிந்த அவர்கள், வில் அம்பு உள்ளிட்டவற்றை சஞ்சனாவுக்கு வாங்கிக் கொடுத்தனர். பெற்றோரின் ஊக்கத்தால் உற்சாகமடைந்தாள் சஞ்சனா. அவளுக்குப் பயிற்சி அளிப்பதற்காக, அவளது பெற்றோர்கள் பல இடங்களுக்குச் சென்று, 2 வயது குழந்தைகளுக்குப் பயிற்சி அளிக்கக் கோரியுள்ளனர். ஆனால், அவர்கள் தேடிச் சென்ற பயிற்சியாளர்கள் கைவிட்டுவிட்டனர். பின்னர், அவர்கள் என்னிடம் வந்தனர். அவளைப் பார்க்கும்போதே எனக்கு தோன்றியது. அவளைச் சந்தித்தபோது ஒரு வில்-அம்பை அவளிடம் கொடுத்தேன். அதை வாங்கிக்கொண்டவள், அதைத் திருப்பி தரவேயில்லை. அப்போது அவளது ஆர்வத்தை உணர்ந்தேன். என்னிடம் சஞ்சனா 2 வயது 9 மாதத்தில் வந்து சேர்ந்தாள். நாள் ஒன்றுக்கு பெரியவர்களே 36 அம்புதான் எய்வார்கள். ஆனால், அவள் 100 அம்புகளை எய்வாள். அவளது அம்பை யாரும் தொடவே கூடாது என்பதில் கவனமாக இருப்பாள். பயிற்சியின்போது ஒருநாள் 500 அம்புகளை எய்தாள். அதைக்கண்டு வியந்தேன். அளப்பரிய திறமை அவளிடமிருப்பதை உணர்ந்து, ஒருநாளில் மொத்தம் எத்தனை அம்புகளை எய்கிறாள் எனப் பரிசோதிக்க முடிவு செய்தேன். அதன்படி தேர்வு செய்த அந்த நாளில் மட்டும், 1,000 அம்புகளை எய்து மிரள வைத்தாள்.

Sponsored


Sponsored


உலகத்தில் எந்தக் குழந்தையாலும் இது முடியாது என்றே எனக்குத் தோன்றுகிறது. குழந்தைக்குச் சொல்லி கொடுக்கும் வகையில் பெற்றோர்களும் அம்பு எய்துக் கற்றுக்கொண்டனர். கின்னஸ் சாதனை நிகழ்த்தலாம் என முடிவெடுத்தோம். 3 வயது குழந்தை சஞ்சனாவை உடலளவிலும் மனதளவிலும் தயார்படுத்தினோம். உடற்பயிற்சிகள் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வைத்தோம். எனர்ஜி லெவலை அதிகரிக்கும் பயிற்சிகளை சஞ்சனா மேற்கொண்டாள். அனைத்திலும் அவள் தேறினாள். கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டை தொடர்ந்து, ஹூயூமன்ஸ் அல்டிமெல்ட் வோல்ட் ரெக்கார்ட் என்று நாங்களே ஒன்றை உருவாக்கியுள்ளோம். இதுவரை யாருமே செய்யாத ரெக்கார்டை பதிவு செய்ய முடிவு செய்தோம். அதில் சஞ்சனா பெயர்தான் முதலிடம். அவள் கின்னஸ் சாதனை செய்ய 3 மணி நேரம் 27 நிமிடம் 33 விநாடிகளில் 1,111 அம்புகளை எய்து கின்னஸ் சாதனை சான்றிதழைப் பெற்றாள். தொடர்ந்து மூன்றரை மணி நேரத்துக்கும் மேலாக ஒரே இடத்தில் நிற்க வேண்டும், அவள் அதை செய்வாளா என்று எங்களுக்குள் பயமிருந்தது. 3 வயது மட்டுமே நிரம்பியவளால் முடியுமா என்று பயந்து நிகழ்ச்சியை ரத்து செய்யட்டுமா என்று கேட்டேன். அதற்கு அவள், `ஐ கேன் டூயிட்' என்றாள். இந்தச் சாதனையை யாரும் செய்யவில்லை. இனியும் யாராலும் செய்ய முடியாது’' என்று பெருமிதத்துடன் அவர் தெரிவித்துள்ளார்.


 Trending Articles

Sponsored