`தண்ணீர் ஓடும் பகுதிகளில் செல்ஃபி எடுக்காதீர்கள்!' - எச்சரித்த அமைச்சர்



Sponsored



நீர்வரத்து அதிகம் உள்ள பகுதிகளில் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்லக்கூடாது. தண்ணீர் ஓடும் பகுதிகளில் செல்ஃபி எடுக்கஅ செல்லக்கூடாது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் வேடிக்கை பார்க்ககூட போகக்கூடாது என அமைச்சர் உதயகுமார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பாதிப்புக்களை பார்வையிட அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் இன்று வந்தனர். நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினர். பின்னர் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தென்மேற்கு பருவமழை குமரி மாவட்டத்தில் அதிக அளவு பெய்துவருவதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகமாக இருக்கிறது. நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்துள்ளதால் கிடைக்கும் நீர், பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் அபாயகரமான 62 பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுப் பாதுகாப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மேலும், அபாயகரமான 12 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 5 மண்டலக் குழுக்கள் மூலம் பணிகள் நடந்து வருகின்றன. 97 வீடுகள் பகுதியும், 22 வீடுகள் முழுமையாகவும் சேதம் அடைந்துள்ளன. 24 மரங்கள் முறிந்துள்ளன, 170 மின்கம்பங்கள் உடைந்துள்ளன. 391 குடும்பங்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன. அதில், 347 குடும்பங்கள் தற்போது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். மின்சார வாரியம் மூலம் சேத மதிப்பீடு கணக்கிடப்பட்டு வருகிறது.

Sponsored


Sponsored


சிறுபாலங்கள், சாலைகள் கணக்கிடப்பட்டு வருகிறது. நெல், வாழை, ரப்பர் போன்ற பயிர் சேதங்கள் கணக்கிடப்பட்டு வருகிறது. வயல்களில் நீர் வடிந்தவற்றில் சேத மதிப்பீடு கணக்கிடப்பட்டு வருகிறது. படகை பாதுக்காக்கச்சென்ற மீனவர்கள் இரண்டுபேர் காணாமல் போய்விட்டனர். அதில் ஒரு மீனவரின் உடல் பாறை இடுக்கில் இருந்து மீட்கப்பட்டது. மற்றொரு மீனவரை தேடும் பணி நடந்து வருகிறது. மழை வெள்ளத்தால் குடிநீர் பிரச்னைகள் வரக்கூடாது என்பதற்காகவும், தொற்றுநோய் பாதிப்புகள் வந்துவிடக்க்கூடாது என்பதற்காகவும் முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தற்போது 50 முதல் 60 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கவேண்டியுள்ளது. நீர்வரத்து குறைந்ததும் மின் இணைப்பு வழங்கப்படும்.

வெள்ளம் அதிகமாக வருவதால் நீர் வரத்து அதிகம் உள்ள பகுதிகளில் குளிக்கவோ, துணிதுவைக்கவோ செல்லக்கூடாது. தண்ணீர் ஓடும் பகுதிகளில் செல்ஃபி எடுக்கச் செல்லக்கூடாது. தடை செய்யப்பட்டப் பகுதிகளில் வேடிக்கை பார்க்ககூட போகக்கூடாது. தமிழகத்தில் 100 கோடியில் குளங்கள் சீரமைக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக 328 கோடியில் 1500 குளங்கள் ஆழப்படுத்தப்பட்டு, கரைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளது. கேரள, கர்நாடகா மாநிலங்களின் மழை நீர் வடிநிலமாக தமிழகத்தைப் பயன்படுத்துவதால் தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சி நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் தண்ணீர் வருகிறது. தமிழகத்தின் குடிநீர் தேவைகள் வடகிழக்கு பருவ மழையில்தான் கிடைக்கும். அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக தாமிரபரணி ஆற்றுடன் கருமேனி ஆறு, நம்பியாற்றை இணைக்கும் திட்டத்திற்காக இரண்டாம் கட்டமாக 170 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணி நடந்துவருகிறது" என்றார்.



Trending Articles

Sponsored