கேரள நிவாரண நிதிக்கு அ.தி.மு.க எம்.பி. எம்.எல்.ஏக்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள்! - முதல்வர் அறிவிப்புமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு அ.தி.மு.க எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தங்கள் ஒருமாத ஊதியத்தை வழங்குவார்கள் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Sponsored


வரலாறு காணாத மழை வெள்ளத்தில் கேரளா மாநிலம் சிக்கி தவிக்கிறது. நிலச்சரிவு காரணமாக வீடுகளை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை,வெள்ளபாதிப்புகளுக்கு உதவும் வகையில், அண்டை மாநிலங்கள் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி எம்.எல்.ஏக்கள் தங்கள் ஒருமாத ஊதியத்தை வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல குஜராத் சுயேச்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி, ஒருமாத ஊதியத்தை கேரளா நிவாரண நிதிக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள் தங்கள் ஒருமாத ஊதியத்தை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு வழங்குவார்கள் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஏற்கெனவே தமிழக அரசு சார்பில், கேராளவுக்கு 10 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored