`வெள்ளம் மக்களுக்கு பெரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது!' - சின்னத்திரை நடிகை உருக்கம் #KeralaFloodsSponsoredகேரள வெள்ளம் மக்களுக்கு பெரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது என அவள் விகடன் ஜாலிடே நிகழ்வில் சின்னத்திரை நடிகை உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

மதுரையில் அவள் விகடன் `ஜாலி டே வாசகிகள் திருவிழா' நடைபெற்றது. இதில் மதிய உணவுக்குப் பிறகு வாசகிகளின்  ஆட்டம் பாட்டத்துடன் மீண்டும் ஜாலிடே களைகட்டத் தொடங்கியது.  போட்டிகளுக்கு இடையே பேரழகி தொடரின் நாயகியான 'காயத்ரி' மேடையில் தோன்றி ரசிகைகளுக்காக நடித்துக் காட்டினார். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் சிவகாமி தொடரில் நடிக்கும் ராஜ்குமார், மகேஸ்வரி ஆகியோர் அரங்கம் அதிர அரங்கத்துக்குள் நுழைந்தனர். 

Sponsored


Sponsored


சிவகாமி தொடரின் கதாநாகியான நீணு கார்த்திகா மேடையில் பேசுகையில்,``நான் கேரளா வயநாட்டுப் பொண்ணு. இப்போ கேரளால ரொம்ப நிலைமை மோசமாக இருக்கிறது. மொத்த ஊரும் வெள்ளத்தால சேதம் அடைஞ்சுருச்சு. இப்போ, அங்க மதம் இல்ல, சாதி இல்ல. மனிதநேயம் ஒண்ணு மட்டும்தான் மக்களைக் காப்பாத்திட்டு இருக்கு. அதனால் இருக்குற வரைக்கும் அன்போட, சந்தோஷமா வாழ்க்கையை வாழுங்க’’ என்றார். அதைத்தொடர்ந்து சிவகாமி தொடரின் கதாநாயகன் வினோத் பாபு, ஒரு நிமிடத்தில் நூறு பாடல்களைப் பாடியும், மிமிக்ரி செய்தும் அசத்தினார்.Trending Articles

Sponsored