``சமூக நீதியின் கலங்கரை விளக்கான கருணாநிதியின் புகழுக்கு என்றும் அழிவில்லை” - வைகோ உருக்கம்Sponsoredமறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு ம.தி.மு.க சார்பில் அஞ்சலி செலுத்தும் வகையில் சேப்பாக்கம் முதல் கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப்பேரணி நடைபெற்றது.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையிலிருந்து மெரினாவில் உள்ள கருணாநிதி அவர்களின் நினைவிடம் வரை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அமைதிப்பேரணி நடைபெற்றது. இந்த அமைதிப் பேரணியில் 100-க்கும் மேற்பட்ட ம.தி.மு.க-வினர் கலந்துகொண்டனர்.

Sponsored


Sponsored


கருணாநிதி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வைகோ அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, `அண்ணாவிடம் வாங்கிய இதயத்தை மீண்டும் ஒப்படைக்க வருகிறேன் என்ற தி.மு.க தலைவர் கருணாநிதி, தற்போது அவருக்கு அருகே இளைப்பாறிக் கொண்டிருக்கிறார். அவருடைய புகழுக்கு என்றும் அழிவில்லை.

சமூகநீதியின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்து, தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுத்து, தமிழகத்துக்கு உரிய திட்டங்களைப் பெற்றுத் தர பாடுபட்டு, சிறுபான்மை மக்களின் அரணாக திகழ்ந்தவர் அவர். அண்ணா, பெரியார் போல அழியா காவியமாக திகழ்வார். எந்நாளும் திராவிட இயக்கத்துக்கு வருகிற அறைகூவல்களை எதிர்த்து போராடுவேன்' என்று அவர் தெரிவித்தார்.Trending Articles

Sponsored