7 ஆண்டுகளுக்குப் பிறகு முழு கொள்ளளவு - பாசனத்துக்காக வைகை அணை திறப்பு!Sponsoredதேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை, நேற்று மாலை தனது முழுக்கொள்ளளவான 69 அடியை எட்டியது. இந்நிலையில் விவசாயத் தேவைக்காக இன்று அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.


பெரியாறு பாசனப்பகுதி மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாய் ஆகியவற்றிற்கு ஒரு போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. 120 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளது. அணை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணை மதகுகளை திறந்துவைத்து மலர்தூவினார். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கதர் மற்றும் கிராமத்தொழில்கள் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். வைகை அணை திறக்கப்பட்டுள்ளதை அடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored