`போட்டோவுக்கு போஸ் கொடுக்க வர்றீங்களா?'- அரசு தலைமைக் கொறடாவை வறுத்தெடுத்த கிராம மக்கள்Sponsored``கொள்ளிடத்தில் தடுப்புச்சுவர் கட்டிக்கொடுங்கள் என்று சொன்னால் காதில் வாங்குவதில்லை. மக்களுக்கு ஆறுதல் சொல்கிறேன் என்ற பெயரில் போட்டோவுக்கு போஸ் கொடுக்க வர்றீங்களா?" என்று கொறடாவை கிராம மக்கள் வறுத்தெடுத்தனர்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ளது மேலராமநல்லூர். இக்கிராமத்தைச் சுற்றி கொள்ளிடம் ஆறு அமைந்துள்ளது. இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றில் செல்லும் அதிகப்படியான தண்ணீர்  கிராமத்தைச்  சூழ்ந்துள்ளதால் கிராம மக்கள் பாதுகாப்பாக மேல் மேட்டில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, தேவைப்படும் வசதிகள் குறித்து அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஜயலெட்சுமி ஆய்வு செய்ய வந்தனர்.

Sponsored


அப்போது கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்துகொண்டு மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் இரண்டு நாள்களாக வெள்ள நீர் சூழ்ந்துகொண்டுள்ளது. இதை அகற்றுவதற்கு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ``கொள்ளிடக் கரையோரம் இருக்கும் கிராமங்களில் கருங்கற்களால் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் எனப் பல வருடங்களாக கோரிக்கை வைத்திருக்கிறோம். ஆனால், அதை நிறைவேற்றாமல் மக்களுக்கு நிவாரணம் வழங்க வருகிறோம் என்று போட்டோவுக்கு போஸ் கொடுக்க வர்றீங்களா?" என்று கொறடாவிடம் கிராம மக்கள் கேள்விகேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அருகில் இருந்த அவரது ஆதரவாளர்கள் கிராம மக்களை சமரசப்படுத்தினர்.

Sponsored


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் விஜயலெட்சுமி, ``வருங்காலங்களில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீரால் பாதிப்பு ஏற்படாத வகையில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து கருத்துரு தயார் செய்ய பொதுப்பணித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கருத்துரு அரசிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. கொள்ளிடக் கரையோர மக்கள் வெள்ள பாதிப்பிலிருந்து தப்பிக்க உரிய விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது" எனக் கூறினார்.

பின்னர் அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன், ``கொள்ளிடக் கரையோரத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெள்ளத்தினால் பயிர் சாகுபடி பாதிப்பிருந்தால் பயிருக்கான இழப்பீடு பெற்றுதர நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.Trending Articles

Sponsored