காலியாக உள்ள ஒரு லட்சம் இடங்கள் - இழுத்து மூடும் நிலைக்குத் தள்ளப்பட்ட பொறியியல் கல்லூரிகள்Sponsoredநடந்து முடிந்த பொறியியல் கலந்தாய்வில் இன்னும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் காலியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் முன்னதாக தெரிவித்திருந்தார். அதன்படி இந்த வருடம் முதல்முறையாக ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் மொத்தம் 1,76,000 இடங்கள் காலியாக இருந்தன. அதற்கு சுமார் 1,59,632 மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர். அதில், சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளுக்குப் பிறகு, 1,04,000 மாணவர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டது. 

Sponsored


ஐந்து கட்டங்களாக நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் தற்போது 74,601 பேர் மட்டுமே கவுன்சிலிங் மூலம் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். இதனால் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளன. கடந்த வருடம் நடைபெற்ற கலந்தாய்வில் 86,000 இடங்கள் மட்டுமே காலியாக இருந்தன. ஆனால், இந்த வருடம் அது அதிகரித்துள்ளது. இதனால் பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதால் அந்தக் கல்லூரிகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்பு போல பொறியியல் படிப்புக்கு வரவேற்புக் கிடைப்பதில்லை என்பதும், பொறியியல் படித்தால் எளிதில் வேலையோ அல்லது அதிக சம்பளமோ கிடைப்பதில்லை எனவே பெரும்பாலான மாணவர்கள் பொறியியலை தவிர்த்து மற்ற துறைகளில் சேர்ந்து வருகின்றனர் எனக் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Sponsored
Trending Articles

Sponsored