விபத்தால் இருண்ட தொழிலாளியின் வாழ்க்கை... ஒரு மணி நேரத்தில் நிதியுதவி அளித்த கலெக்டர்Sponsored உதவித் தொகை கேட்டு படுத்த படுக்கையாக வந்த ஊனமுற்ற தொழிலாளி ஒருவருக்கு ஒரு மணி நேரத்தில் நிதி உதவி அளித்து அசத்தினார் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே மேலக்கிடாரத்தைச் சேர்ந்தவர் விவசாயி சௌந்தரபாண்டியன் (40). விவசாயக் கூலித் தொழிலாளியான இவர் டிராக்டரில் வைக்கோல்களை ஏற்றி வேலை செய்துகொண்டிருந்தபோது  டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் இவரின் தண்டுவடம் பாதிக்கப்பட்டு எழுந்து உட்காரகூட முடியாத அளவுக்குப் பாதிப்படைந்துள்ளார். மேலும் கை, கால்களும் செயல் இழந்து போயின. இதையடுத்து அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இவருக்கு போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால் செளந்தரபாண்டியன் முடங்கிய நிலையில் அவரின் மனைவி மற்றும் 3 குழந்தைகளும் வருமானம் இன்றி தவித்து வந்துள்ளனர்.

படுத்த படுக்கையாகக் கிடக்கும் கணவர் செளந்தரபாண்டியனை கவனிக்க வேண்டியிருந்ததால் அவரின் மனைவி கல்யாணியும் அவரை தனியாக விட்டுவிட்டு வேறு வேலைக்குச் செல்ல முடியவில்லை. இதையடுத்து ஊனமுற்றோருக்கு வழங்கப்படும் உதவி தொகைக்காகக் கடந்த 5 மாதங்களுக்கு முன் வருவாய்த் துறையினரிடம் மனு அளித்திருந்தார். ஆனாலும், அவர்களது மனுவை அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை. இதனால் தொடர்ந்து கஷ்டத்தில் வாழ்க்கை நடத்தி வந்த கல்யாணி, ஊனமான தன் கணவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குக் கொண்டு வந்து தரையில் கிடத்தினார். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்தர ஊக்கத்தொகை வழங்கிடுமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க காத்திருந்தார்.

Sponsored


Sponsored


இதுபற்றி தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் நடராஜன் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கும் இடத்திலிருந்து வெளியே வந்து தரையில் கிடத்தப்பட்டிருந்த செளந்தரபாண்டியனை சந்தித்தார். அவரிடம் செளந்தரபாண்டியனின் மனைவி கல்யாணி நடந்த சம்பவத்தை விளக்கியதுடன் உதவி செய்யும்படியும் வேண்டினார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் நடராஜன், மாவட்ட ஆட்சியரின் தனிப்பட்ட நிதியிலிருந்து ரூ.10,000 நிதியுதவி செய்வதற்கான காசோலையை வழங்கினார். மேலும், ஊனமுற்றோருக்கான உதவி தொகையை வழங்கவும் சௌந்தரபாண்டியனுக்கு முறையாக மருத்துவம் பார்க்கத் தேவையான உதவிகள் அளிக்கவும் உறுதியளித்தார். மனுநீதி நாளில் உதவிக்கேட்டு வந்த ஊனமுற்ற விவசாயத் தொழிலாளிக்கு ஒரு மணி நேரத்தில் நிதி உதவி அளித்த மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையால் அந்தக் குடும்பத்தினர் நெகிழ்ந்துபோயினர்.Trending Articles

Sponsored