கேரள மக்களுக்கு உதவிய திருப்பூர் திருநங்கைகள்!



Sponsored



திருப்பூரை சேர்ந்த சில திருநங்கைகள் தங்களின் ஒரு வார கால வருமானத்தை வைத்து கேரளாவுக்கு வெள்ள நிவாரணப் பொருள்களை அனுப்பியிருக்கும் சம்பவம் பெரும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத கனமழை, வெள்ளம் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மக்கள் தங்களால் முடிந்த நிவாரண உதவிகளைக் கேரளத்துக்கு அள்ளிக்கொடுத்து வருகிறார்கள். கேரள மக்களுக்கு உதவும் விதமாகத் திருப்பூரைச் சேர்ந்த சில திருநங்கைகள் தங்களால் முடிந்த நிவாரண பொருள்களை வாங்கி அனுப்பியிருப்பது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

Sponsored


திருப்பூர் மாவட்டப் பகுதிகளில் வசிக்கும் திருநங்கைகள், தங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த சுமார் 60 பேரை ஒன்று திரட்டியிருக்கிறார்கள். பின்னர், அனைவரும் சேர்ந்து தங்களது ஒரு வார கால வருமானத் தொகையான சுமார் 30,000 ரூபாய் பணத்தை வைத்து உணவுப் பொருள்கள், மருந்துப் பொருள்கள் மற்றும் உடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்கியிருக்கிறார்கள். பின்னர், அதை பாதிக்கப்பட்ட கேரள மக்களிடம் சென்றுசேர்க்கும் விதமாக திருப்பூர் மாவட்ட நிவாரண பொருள்கள் பெறும் மையத்தில் இன்று நேரில் சென்று வழங்கியிருக்கிறார்கள். நிவாரணப் பொருள்களை பெற்றுக்கொண்ட திருப்பூர் மாவட்டச் சமூக நலத்துறை அதிகாரிகள் திருநங்கைகளை வெகுவாகப் பாராட்டி அனுப்பி வைத்தனர்.

Sponsored




Trending Articles

Sponsored