குளத்தில் குளிக்கச் சென்ற அண்ணன், தம்பி நீரில் மூழ்கிப் பலி - சோகத்தில் மூழ்கிய கிராமம்!Sponsoredதஞ்சாவூர் அருகே குளத்துக்கு குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி இருவரும் தண்ணீரில் மூழ்கி பலியாயினர். தம்பி தண்ணீரில் மூழ்கித் தத்தளிக்க, அவனைக் காப்பாற்றுவதற்காகச் சென்ற அண்ணனும்  நீரில் மூழ்கி இறந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் அருகே உள்ள ஆர்.சுத்திபட்டு கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர், நாராயணன். விவசாயியான இவருக்கு வசந்தகுமார், அபிமன்யன் என்ற 2 மகன்கள்  இருந்தனர். இருவரும் தஞ்சையில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் படித்துவந்தனர். இன்று காலை பள்ளிக்குச் செல்வதற்காக, அந்தப் பகுதியில் உள்ள நரசிம்மர் கோயில் குளத்தில் குளிக்கச் சென்றனர்.  சில மாதங்களுக்கு முன் குளம் தூர்வாரப்பட்டிருந்ததால், குளத்தில் தண்ணீர் அதிக அளவில் இருந்துள்ளது. இரண்டு பேரும்  உற்சாகமாக குளித்துக் கொண்டிருக்கும்போது, எதிர்பாராதவிதமாக குளத்தின்  ஆழமான பகுதிக்குச் சென்றுவிட்டனர். இருவருக்கும்  நீச்சல் தெரியாததால், சத்தம் போட்டுக்கொண்டே தண்ணீரில்  மூழ்கத் தொடங்கினர். இவர்களின், சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த கரைக்கு அருகில் நின்றிருந்த சிலர், ஓடி வந்து குளத்தில் இறங்கித் தேடினர். ஆனால், இருவரையும் காப்பாற்ற முடியவில்லை. பின்னர்,  இதுகுறித்து தஞ்சை போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீஸார், தீயணைப்புப் படையினர்  உதவியுடன் இருவரின்  உடல்களையும் மீட்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன்,தம்பி  இருவரும் குளத்தில் மூழ்கிப் பலியான சம்பவம்  அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sponsored


குளத்துக்கு அருகில் நின்றுகொண்டிருந்தவர்களிடம் பேசினோம். ``அண்ணன் தம்பியான  இரண்டு பசங்களும் அடிக்கடி இங்கு வந்து குளிப்பாங்க. ஆனால், அவர்களுக்கு நீச்சல் தெரியாது. இன்றைக்கும் வழக்கம்போல குளித்துக்கொண்டிருந்தார்கள். எதிர்பாராத விதமாக தம்பி,முதலில் ஆழத்துக்குச் சென்று தத்தளித்திருக்கிறான். அவனைக் காப்பாற்ற அண்ணன் முயன்றிருக்கிறான். அவனுக்கு முடியாமல் போகவே, `தம்பி தண்ணீரில் மூழ்குறான். யாராவது வாங்க' என தத்தளித்துக்கொண்டே கத்தவே, தூரத்தில் நின்ற நாங்கள் சத்தம் கேட்டு ஓடிவந்தோம். ஆனால், அதற்குள் இருவரும் மூழ்கிவிட்டனர். எவ்வளவு முயன்றும் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை என்பதுதான் கடும் வேதனையாக இருக்கிறது’’ என்றார். சொந்தக்காரப் பெண் ஒருவர், 'அண்ணனும்  தம்பியும் ஒருத்தரை ஒருத்தர் பிரியாம எப்பவும் ஒண்ணாதான் இருப்பாங்க. காலையில் குளிக்கப் போகும்போதுகூட ஒருத்தனுக்கு ஒருத்தன் துணையாதான் போவாங்க. இப்படி எங்களைத் தவிக்கவிட்டுட்டு ஒரேயடியா ஒண்ணாவே போய்ச் சேர்வாங்கன்னு நினைக்கல' எனக்  கதறி அழுதது அனைவரையும் கலங்கடித்தது.

Sponsored
Trending Articles

Sponsored