பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ்!Sponsoredகாடுவெட்டி குரு மரணம் அடைந்தபோது பா.ம.க-வினர் அரசுப் பேருந்துகளைச் சேதப்படுத்தியதால் ஏற்பட்ட இழப்பை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸிடம் பெற உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராமதாஸுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருக்கிறது. 

இதுதொடர்பாக, நெல்லையைச் சேர்ந்த சுந்தரவேல் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல்செய்த மனுவில்," பா.ம.க-வைச் சேர்ந்த காடுவெட்டி குரு, கடந்த மே-26-ம் தேதி இறந்தார். இதைக் காரணம் காட்டி, அக்கட்சியினர் பேருந்துகள்மீது கல்லெறிந்து, கடைகளை மூடுவது போன்ற அசம்பாவிதச் செயல்களில் ஈடுபட்டனர். இதனால், பல்வேறு அரசுப் பேருந்துகள் சேதமடைந்தன. சமூக விரோதிகள் பல்வேறு இடங்களில் பொதுச்சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தியும், பொதுமக்களுக்கு இடையூறுகளும் செய்தனர். இத்தகைய வன்முறை காரணமாக, அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Sponsored


எனவே, காடுவெட்டி குரு மரணம் அடைந்தபோது அக்கட்சியினர் அரசுப் பேருந்துகளைச் சேதப்படுத்தி ஏற்பட்ட இழப்பை பா.ம.க நிறுவனர் ராமதாஸிடம் பெற, தலைமைச்செயலர், தமிழக உள்துறைச் செயலர், தமிழகக் காவல்துறை ஐ.ஜி ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்’’ என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு, இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக விளக்கமளிக்க பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 4 வார காலத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Sponsored
Trending Articles

Sponsored