மயானம் செல்ல வழி கேட்டு பட்டியல் இன மக்கள் ஆட்சியரிடம் மனு!மயானத்துக்குச் செல்லும் பாதையில் செல்ல விடாமல் மாற்று சாதியினர் தடுத்து நிறுத்துவதாக சொல்லி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் லதாவிடம் மனு அளித்தனர் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்கள்.

Sponsored


அதில் நம்மிடம் பேசிய மாணிக்கம் என்பவர் ``சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ளது சிலாமேகநாடு. இந்தக் கிராமத்தில் பட்டியல் இனத்தினரும் மாற்று சாதியினரும் சுமார் ஐந்நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். மாற்று சாதியினர், குடியிருக்கும்  பகுதிகளில் ரோடு வசதி இருக்கிறது. நாங்கள் குடியிருந்து வரும் பகுதியில் மண்சாலைதான். இந்த சாலையை மாற்று சாதியினர் 2014 -ம் ஆண்டியில் இருந்தே ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள். இது சம்பந்தமாக  வி.ஏ.ஓ முதல் மாவட்ட ஆட்சியர் வரைக்கும் மனு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தச் சாலை வழியாகத்தான் மயானத்துக்கு நாங்கள் செல்ல வேண்டும். இந்தப் பாதையைப் பயன்படுத்தவிடாமல் அவர்கள் தடுப்பதால் எங்களில் யாராவது இறந்து போனால் இரண்டு கிலோமீட்டர் தூரம் வயல்காட்டுப் பகுதிக்குள் நடந்து சுற்றிவரவேண்டியது இருக்கிறது.

Sponsored


எங்களுக்குச் சொந்தமான ஸ்ரீவீராயி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பாதையை மாற்று சாதியினர் தடுத்திருக்கிறார்கள். இது சம்பந்தமாக தாசில்தார், வருவாய் ஆய்வாளர், காவல் சார்பு ஆய்வாளர், வி.ஏ.ஓ முன்னிலையில் சமாதானக்கூட்டம் நடைபெற்றபோது இந்த பிரச்னைகளை அதிகாரிகள் முன்பு எடுத்துச்சொல்லியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்றார்.

Sponsored
Trending Articles

Sponsored