வெள்ளத்தில் கேரளா... வறட்சியில் தேனி கால்வாய்கள்... இடையில் நிற்கும் ஓர் அரசாணை!Sponsoredகடும் மழை கேரள மாநிலத்தை வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான அணைகள் திறக்கப்பட்டு முடிந்தவரை வெள்ள நீரைக் கடலில் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். தண்ணீரும் மழையும் கேரள மக்களுக்குப் புதிது இல்லை என்றாலும் அரை நூற்றாண்டுக்கு மேல் ஆகிறது இப்படி ஒரு பருவமழை வெடிப்பை அவர்கள் சந்தித்து. இவை எல்லாம் மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குப் பக்கம் நடந்துகொண்டிருந்தாலும் அதன் கிழக்கு பக்கமான தமிழகத்தின் தேனி மாவட்டத்தின் நிலை தலைகீழாக உள்ளது.

முல்லைப்பெரியாறு அணையும், வைகை அணையும் :

ஒட்டுமொத்த கேரளமே வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்த நேரத்தில், தேனி மாவட்டத்தின் பிரதான அணைகளான முல்லைப்பெரியாறு மற்றும் வைகை அணைகளின் நீர்மட்டம் மிகச் சொற்பமான அளவே உயர்ந்திருந்தது. கடந்த ஆகஸ்ட் 15’ம் தேதி தான் முல்லைப்பெரியாறு அணை 142 அடியை எட்டியது.

Sponsored


அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது. இதனால் கேரள, மற்றும் தமிழகப் பகுதிகள் வழியாகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தமிழகப் பகுதியில் திறக்கப்பட்ட தண்ணீரானது, நேராக வைகை அணையைக் அடைந்து அணையின் கொள்ளளவை அதிகரிக்கச் செய்தது. இதன் விளைவாகக் கடந்த 19 ம் தேதி வைகை அணை தனது முழுக் கொள்ளளவான 69 அடியை எட்டியது. தேனி மாவட்டத்தின் பிரதான அணைகளில் அதிகப்படியான தண்ணீர் இருந்தும், தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் காய்ந்து கிடக்கின்றன. இதற்கான காரணத்தை ஆராய்ந்த போது நம் முன்னால் நின்றது திறக்கப்படாத `மூன்று கால்வாய்கள்’.

Sponsored


மூன்று கால்வாய்கள் :

தந்தை பெரியார் கால்வாய், பி.டி.ஆர் கால்வாய் மற்றும் 18 ம் கால்வாய், ஆகிய மூன்றும் தேனி மாவட்டத்தின் பிரதான கால்வாய்களாக விளங்குகின்றன. இதில், தந்தைப் பெரியார் கால்வாய் மற்றும் பி.டி.ஆர் கால்வாய் மூலமாக மொத்தம் 27 குளங்களுக்கு நேரடியாகத் தண்ணீர் சென்று சேரும். இதனால் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடி பாசன வசதி பெரும்.

இவை ஒருபுறம் என்றால் முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் கனவுத்திட்டமான 18ம் கால்வாய் மூலமாக 44 கண்மாய்களுக்கு நேரடியாகத் தண்ணீர் சென்று சேரும். இதனால் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடிப் பாசன வசதி பெரும். கண்மாய், விவசாய நிலம் மட்டுமல்லாமல், இக்கால்வாய்களின் மூலமாக நிலத்தடி நீர் உயர்ந்து, கிணறுகளில் தண்ணீர் பெருகும். முல்லைப்பெரியாறின் மூலமாகத்தான் மேற்கண்ட மூன்று கால்வாய்களுக்கும் தண்ணீர் செல்கிறது. தற்போது முல்லைப் பெரியாற்றில் வெள்ளம் வந்துகொண்டிருந்த போதிலும் மூன்று கால்வாய்களும் திறக்கப்படாமல் இருக்கின்றன. இதனால், பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள விவசாய நிலம் தண்ணீரின்றி காய்ந்துகிடக்கிறது. பல நூறு விவசாயிகள் விவசாயம் பார்க்க முடியாமல் தவிக்கிறார்கள்.

தடையாக உள்ள அரசாணை :

வைகை அணை மற்றும் முல்லைப்பெரியாறு அணை ஆகிய இரு அணைகளையும் சேர்த்து 5 ஆயிரம் மில்லியன் கன அடிக்கு மேல் தண்ணீர் இருக்கும் போது, தந்தைப்பெரியார் கால்வாய் மற்றும் பி.டி.ஆர் கால்வாய்கள் திறக்கப்படும். அதே நேரம் இரு அணைகளையும் சேர்த்து 6 ஆயிரத்து 250 மில்லியன் கன அடிக்கு மேல் தண்ணீர் இருக்கும் போது 18 ம் கால்வாய் திறக்கப்படும். இது விதியாக உள்ளது. தற்போது இரு அணைகளையும் சேர்த்து 13 ஆயிரத்து 500 மில்லியன் கன அடிக்கு மேல் தண்ணீர் இருந்தும் மூன்று கால்வாய்களும் திறக்கப்படாமல் உள்ளன. இதற்கான காரணத்தைப் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ``ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம்தான் கால்வாய்ப் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதுதான் அரசாணை. அதன்படிதான் நடக்க முடியும்.!” என்றனர்.

அணைகளில் நீர் இருப்பு அதிகமாக இருக்கும் போது ஏன் கால்வாய் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கவில்லை எனத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது. ``இன்னும் இரு தினங்களில் தண்ணீர் திறக்கப்படும்.!” என்றார்.

அரசாணை என்பது மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு பிறப்பிக்கப்படுவதே அன்றி மக்களை வதைப்பதற்காக அல்ல.Trending Articles

Sponsored