‘கேரள மக்களுக்கு எங்களால் முடிந்த உதவி!’- நிவாரணப் பொருள் அனுப்பிய ஜெய்ஆனந்த்Sponsoredஅண்ணா திராவிடர் கழகத்தின் சார்பில் கேரளாவுக்கு ரூ.3,00,000 மதிப்பிலான மருத்துவபொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

 

கேரள மாநிலத்தில் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கிய பருவமழை ஆகஸ்ட் மாதத்தில் தீவிரமடைந்தது. இதன்காரணமாக மாநிலத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பியது. பாதுகாப்புக் கருதி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. மழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக கேரள மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். மாநிலமே வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. தற்போது மழை குறைந்துள்ளது. இதையடுத்து மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ள நீர் வடிந்த பகுதிகளில் பொதுமக்கள் தங்களது இல்லங்களைச் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு மாநில மக்களும் கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். அந்த வகையில் அண்ணா திராவிடர் கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளர் ஜெய்ஆனந்த், கேரள மக்களுக்காக நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்துள்ளார். மருந்துப் பொருள்கள், மீட்புப்பணிகளுக்காக 2 படகுகள் போன்றவற்றைத் தனது கட்சித் தொண்டர்கள் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored