சென்னை பெசன்ட் நகரில் 75 கடைகள் அகற்றம்! - வியாபாரிகள் கண்ணீர்Sponsoredசென்னை பெசன்ட் நகரில் வீட்டுவசதி வாரியத்துறைக்குச் சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இன்று காலை இங்குள்ள கடைகளை காலி செய்யச் சொல்லி அதிகாரிகள் அதிரடியில் ஈடுபட்டனர். 75-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அங்கிருந்த 60-க்கும் மேற்பட்ட கடைகளைக் காலி செய்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கடைகளைக் காலி செய்யச் சொல்லி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின்னரும் கடைகள் செயல்பட்டு வந்துள்ளது. கடைக்காரர்களும் தாங்கள் வாடகை கட்டிவந்ததாகத் தெரிவித்தனர். மேலும், இன்று திடீரென கடைகளை அதிரடியாகக் காலி செய்யச் சொன்னால் எங்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும் என்று கண்கலங்கினர். வீட்டுவசதி வாரிய பொறியாளர் கூறுகையில்,``இந்தக் கடைகளை ஒப்பந்தம் எடுத்தவர்களில் பலரும் வேறு நபருக்கு உள்வாடகைக்கு விட்டுள்ளனர். கடந்த ஒருவருடத்துக்கு முன்பே கடைகளைக் காலி செய்யச் சொல்லிவிட்டோம். இந்தப் பகுதியில் புதிய ஸ்கீம் கொண்டு வர இருக்கிறோம். அதனால்தான் தற்போது கடைகளைக் காலி செய்யச் சொல்கிறோம்" என்றார்.

Sponsored


வீட்டு வாடகைதாரர்கள் விஷயத்துக்கே அவ்வளவு கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் தமிழக அரசு, இதுபோன்ற வணிக வளாக வாடகை விஷயத்தையும் முறையாக ஒழுங்குபடுத்திக் கவனித்திருந்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுத்திருக்க முடியும்!

Sponsored
Trending Articles

Sponsored