சிலைக் கடத்தல் வழக்கு - நியாயமான விசாரணை வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு!Sponsoredசிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகள் குறித்து அறநிலையத்துறை சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சிலைகள் காணாமல் போவது மற்றும் கடத்தப்படுவது குறித்த வழக்குகளை தமிழ்நாடு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 1-ம் தேதி இதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ.க்கு மாற்றி அரசாணைப் பிறப்பித்தது தமிழக அரசு. 
தமிழக அரசின் இந்த முடிவுக்கு தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரே அனைத்து வழக்குகளையும் விசாரிக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பிலிருந்தும் அரசுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும்போதே சி.பி.ஐ.க்கு எப்படி மாற்றலாம் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

Sponsored


Sponsored


இதையடுத்து கும்பகோணம் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை மட்டும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரிக்கும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் 'சிலைக் கடத்தல் தொடர்பாக நடத்தப்படும் அனைத்து விசாரணைகளும் முறையாகவும் சரியாகவும் நடத்தப்பட வேண்டும். சிலைகளைப் பாதுகாப்பதில் அறநிலையத்துறை மிகுந்த கவனம் எடுத்து வருகிறது. சரியான விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.Trending Articles

Sponsored