மக்கள் மனு அளிக்க ஆலையின் தூண்டுதலே காரணம்! - ஸ்டெர்லைட் நிர்வாகத்தின்மீது வைகோ குற்றச்சாட்டுSponsored”ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான ஆய்வுக் குழுவில், தமிழக நீதிபதியை நியமிக்க வேண்டாம் என ஆலைத் தரப்பு கூறியுள்ளது தவறு. தமிழகத்தில் உள்ள நீதிபதிகள் நடுநிலை தவறியவர்கள் என்ற பொருள்படும் விதத்தில், குறைசொல்வதாகவே உள்ளது. இதற்குக் கடும் ஆட்சேபனை தெரிவிக்கிறேன்” என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

பிரணாப் முகர்ஜி ராணுவ அமைச்சராக இருந்தபோது, அவருக்கு கறுப்புக்கொடி காட்டிய வழக்கில், தூத்துக்குடி ஜே.எம்-2 நீதிமன்றத்தில் ஆஜரான பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சாலைக்கு எதிரான வழக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில் வழக்கு விசாரணையில், ”ஓய்வுபெற்ற முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்து, அக்குழு முழுமையாக ஆய்வுசெய்த பின், ஒரு முடிவை அறிவிக்கட்டும்” என தீர்ப்பாயம் முடிவுசெய்தது. அதற்கு, ஸ்டெர்லைட் ஆலைத் தரப்பில், “தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த நீதிபதியையும் நியமிக்கக் கூடாது. கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து நீதிபதியை நியமியுங்கள்” என்று சொல்லப்பட்டது.

Sponsored


எந்த மாநில நீதிபதியை ஆய்வுக் குழுவில் நியமிக்க வேண்டும் என்பதைத் தீர்ப்பாயம்தான் முடிவுசெய்ய வேண்டும். ஆலைத்தரப்பே, ''இவர்களை நீதிபதியாக நியமியுங்கள்” எனச் சொல்வது தவறு. இந்த ஆலை இருப்பது தமிழ்நாட்டில். ஆலையை மூட வலியுறுத்தி நடந்த முற்றுகைப் போராட்டத்தில், மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதும் தமிழ்நாட்டில். அரசுத் தரப்பில் இருந்தும் ஆலை மீதான வழக்கும் தமிழ்நாட்டில்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இச்சூழலில், தமிழகத்தில் உள்ள நீதிபதிகள் நடுநிலை தவறியவர்கள் என்ற பொருள்படும் விதத்தில் குறைசொல்வதாகவே உள்ளது. இதற்குக் கடும் ஆட்சேபனை தெரிவிக்கிறேன். ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் அரசு அமைச்சரவையில் கொள்கைமுடிவு எடுத்து, சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி சட்டமாக்கி, இன்ன இன்ன காரணங்களால் இத்தனை பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது என்று தெரிவித்து, ஆலையை மூட வேண்டும் என்கிற ஒரு முடிவு எடுக்காத சூழலில், இது திறப்பதற்கான முயற்சியில் நீதித்துறையின்மூலம் முயல்வதாக உள்ளது. இதில், தமிழக அரசு சரியாகச் செயல்படவில்லை.

Sponsored


ஆலையைத் திறக்க வேண்டும் என்று ஆலை நிர்வாகம் எல்லா வழிகளிலும் முயல்கிறது. ஒட்டுமொத்த சுற்றுவட்டார மக்களின் மனநிலை இந்த ஆலைக்கு எதிராகவே உள்ளது என்பதுதான் உண்மை. இந்தச் சூழலில், பல கிராம மக்கள் மீண்டும் ஆலையைத் திறக்க வேண்டும் எனவும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் வாரந்தோறும் ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து மனு அளிப்பது அனைத்தும் ஆலையின் தூண்டுதலினால்தான் என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும்” என்றார்.  Trending Articles

Sponsored