பிரபல கட்டுமான நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு!Sponsoredசென்னையில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல கட்டுமான நிறுவனமான காசா கிராண்ட், வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த புகாரை அடுத்து, அந்நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இன்று காலை தொடங்கிய சோதனை தற்போது வரை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சென்னை திருவான்மியூரில் உள்ள தலைமை அலுவலகத்திலிருந்து சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Sponsored


கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தில் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் பல வருமான வரிச் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முன்னதாக தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு முட்டை விநியோகம் செய்யும் கிறிஸ்டி நிறுவனத்தில் சோதனை நடைபெற்றது. இதையடுத்து, தமிழக நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்த பணிகளை செய்து வந்த எஸ்.பி.கே நிறுவனத்தில் வருமானவரி சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

Sponsored
Trending Articles

Sponsored