40 மணி நேரத்துக்குப் பின் சீர்செய்யப்பட்ட கொள்ளிடக்கரை - நிம்மதியில் பொதுமக்கள்!Sponsoredநாகை மாவட்டம் அளக்குடி கிராமத்தில், கொள்ளிடம் ஆற்றின் கரையில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யும் பணி, 40 மணி நேரத்துக்குப் பின் முடிவடைந்தது. 

மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் அதிகப்படியான உபரிநீரால், கடந்த 5 நாள்களாக கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் கன அடி வரை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொள்ளிடக் கரையோரம் இருக்கும் பாலூரான் படுகை, நாதல் படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளமணல் ஆகிய கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட்டு, முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Sponsored


 அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையில், ரூ.64 கோடி மதிப்பீட்டில் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டிருந்த கான்கீரீட் தடுப்புச்சுவர், வெள்ளப் பெருக்கால் கடந்த 18-ம் தேதி இரவு திடீரென விரிசல் ஏற்பட்டது. இதனால், கரையில் உடைப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானது.

Sponsored


மணல் மூட்டை, மரக்கட்டைகள், பாறைக் கற்கள் கொண்டு உடைப்பைச் சரிசெய்யும் பணி இரவு பகலாக நடந்தது. சுமார் 40 மணி நேரத்துக்குப் பின்னர், உடைப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டது. தொடர்ந்து கரை கண்காணிக்கப்பட்டுவருகிறது. இந்தப் பணிகளை தஞ்சைச் சரக டி.ஐ.ஜி லோகநாதன் பார்வையிட்டார். அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு நேரங்களில் மக்களைப் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்க கவனம்செலுத்த வேண்டும் என்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு அறிவுறுத்தினர்.

உடைப்பு சரி செய்யப்பட்டதால் அளக்குடி, முதலைமேடு, புளியந்துரை, மகேந்திரப்பள்ளி, காட்டூர், பழைய பாளையம், ஆரப்பள்ளம் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். கரை உடைப்பு ஏற்பட்ட இடத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், வெள்ள கண்காணிப்பு அலுவலர் சுனில் பாலிவால், கலெக்டர் சுரேஷ்குமார், தலைமைப் பொறியாளர் செந்தில்குமார், கண்காணிப்புப் பொறியாளர் ரவிச்சந்திரன், செயற் பொறியாளர் ஆசைத்தம்பி, சீர்காழி எம்.எல்.ஏ., பாரதி ஆகியோர் முகாமிட்டு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.Trending Articles

Sponsored