`வழக்கு இருக்கும்போது இப்படிச் செய்யலாமா?’ - அதிகாரிகளுக்கு எதிராகக் கொந்தளித்த பாதிக்கப்பட்ட மக்கள்Sponsored"வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் அடாவடியாகக் கிறிஸ்துவ ஆலயத்துக்குச் செல்லும் பொது பாதையை அடைத்திருக்கிறார்கள் அதிகாரிகள். யாரோ ஒருவரை திருப்திப்படுத்துவதற்காக எங்களை அதிகாரிகள் துன்புறுத்துவது நியாயமா, அதிகாரிகள் மீது வழக்கு தொடரப் போகிறோம்" எனப் பாதிக்கப்பட்டவர்கள் கூறினர். 

    

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலிருந்து செந்துறை செல்லும் சாலையில் அமைந்துள்ளது இம்மானுவேல் ஆலயம். இவ்வாலயம் கடந்த 2007-ம் ஆண்டு சொந்தமாக இடம் வாங்கிக் கட்டப்பட்டது. அப்போது இந்தத் தேவாலயத்துக்குச் செல்ல 100 அடி உள்ள பொதுப்பாதையைப் பயன்படுத்திக்கொள்ள ஜெயங்கொண்டம் நகராட்சியின் அனுமதியைப் பெற்று தேவாலயம் இயங்கி வருகிறது. இந்தத் தேவாலயத்தில் 700-க்கும் மேற்பட்ட மக்கள் வழிபாடு நடத்துகின்றனர். 

Sponsored


இந்தநிலையில், தேவாலயத்துக்கு முன்பாக இந்துக்களின் இடுகாடு உள்ளது. இதையடுத்து இந்துக்களின் இடுகாட்டு வழியாகக் கிறிஸ்துவர்கள் செல்லக் கூடாது எனக் கூறி இடுகாட்டுக்குச் சொந்தமான இடத்தை அளந்து முள்வேலி அமைத்துத் தர வேண்டும் எனக் கூறி நகராட்சி ஆணையர் மற்றும் தாசில்தாரிடம் இந்து அமைப்பினர் மனு அளித்தனர். அப்போது இருதரப்புக்குமிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

Sponsored


                                    

இந்நிலையில் தேவாலயத்தில் கிறிஸ்துவர்கள் சிலர் இருக்கும்போது தேவாலயத்துக்கு வந்த தாசில்தார், நகராட்சி ஆணையர் மற்றும் கோட்டாட்சியர் இடுகாட்டுக்கு உரிய இடத்தில் முள்வேலி அமைத்தனர். அப்போது, தேவாலயத்தின் கேட்டை மறித்து முள்வேலி போட்டதால் உள்ளே இருந்தவர்கள் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இது குறித்து தேவாலய மக்களிடம் பேசியபோது, ``தேவாலயம் கட்டடம் அதற்கான பாதை நகராட்சியின் அனுமதியோடுதான் கட்டப்பட்டது. ஆனால், தற்போது பொதுப்பாதையைக் குறிப்பிட்ட சமூகத்துக்குச் சொந்தமானது எனச் சிலர் உரிமை கொண்டாடுகிறார்கள். இது குறித்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அரசு அதிகாரிகளும் அவர்களுக்கு உடந்தையாக உள்ளனர். சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், பாதுகாக்க வேண்டிய எங்களை நசுக்கப் பார்க்கிறார்கள். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.Trending Articles

Sponsored