கேரள நிவாரணத்துக்கு தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் ஒரு மாத சம்பளம்! - மு.க.ஸ்டாலின் அறிவிப்புSponsored'தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்களின் ஒரு மாத சம்பளம், மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு, வெள்ள நிவாரணமாக வழங்கப்படும்' என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

கேரளாவில், கடந்த 8-ம் தேதி தொடங்கிய தென்மேற்குப் பருவ மழையினால், அம்மாநிலம் முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்த வெள்ளத்தில் 350-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். நேற்றிலிருந்து வெள்ளம் வடியத்தொடங்கிய நிலையில், கேரளாவில் மெள்ள மெள்ள இயல்பு வாழ்க்கை திரும்பிவருகிறது. கேரளாவுக்கு பல இடங்களிலிருந்து உதவிகள் குவிந்துவருகின்றன. இந்த நிலையில், தி.மு.க சார்பில் அவர்களது கட்சி எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்களின் ஒரு மாத சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Sponsored


Sponsored


இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'வரலாறு காணாத மழை வெள்ளத்தால் கேரள மாநிலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்திலும், நிலச்சரிவுகளிலும் சிக்கி இதுவரை 357 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளார்கள். இயற்கைப் பேரிடர் அம்மாநில உட்கட்டமைப்புக்கு மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், கேரள மாநில மக்களின் துயர் துடைப்புப் பணிகளுக்கு உதவிடும் வகையில், தி.மு.க சார்பில் ஏற்கெனவே ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது. இது தவிர, கேரள மாநில கழக நிர்வாகிகளும், இங்குள்ள கழகத் தோழர்களும் நிவாரண உதவிகளையும், பொருள்களையும் வழங்கிவருகிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக, கேரளாவில் நிகழ்ந்துள்ள இந்த மிகக் கடுமையான பேரிடரால் அம்மாநில மக்களின் வாழ்வாதாரமும் எதிர்காலமும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்ற நேரத்தில், அம்மாநில சீரமைப்புப் பணிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், திராவிட முன்னேற்றக் கழகச் சட்டமன்ற உறுப்பினர்களும், மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களது ஒரு மாத சம்பளத்தை 'கேரள மாநில வெள்ள நிவாரண நிதியாக' அளிப்பார்கள்' என்று தெரிவித்துள்ளார்.Trending Articles

Sponsored