கேரளாவுக்கு ரசிகர்கள் மூலம் நிவாரண நிதி அனுப்பிய நடிகர் விஜய்!Sponsored கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். 


 

கேரளா வரலாறு காணாத இயற்கை சீற்றத்தைச் சந்தித்துள்ளது. தற்போது அங்கு மழை படிப்படியாகக் குறைந்து வருகிறது. `கடந்த 100 ஆண்டுகளில் இப்படியொரு பேரழிவை கேரளா சந்தித்ததில்லை. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 20,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதம் அடைந்துள்ளன’ என்று கேரள முதல்வர் பினராயி வேதனை தெரிவித்துள்ளார். 

கன மழையால் நிலைகுலைந்துள்ள கேரளாவுக்கு, பல்வேறு மாநில அரசுகள் உதவி செய்ய முன் வந்துள்ளன. இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் கேரள மக்களுக்கு உதவி செய்ய பலர் முன் வந்துள்ளனர்.  ஐக்கிய அரபு எமிரேட் நாடு, ரூ.700 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.

தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழக மக்களும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்துவருகின்றனர். தமிழ்த் திரையுலகினர் பலரும் கேரளாவுக்கு நிவாரணத் தொகை வழங்கிவருகின்றனர். நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சமும், தனுஷ் ரூ.15 லட்சமும், சூர்யா - கார்த்தி ரூ.25 லட்சமும், சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சமும், ரஜினிகாந்த் ரூ.15 லட்சமும், விக்ரம் ரூ.35  லட்சமும் கொடுத்துள்ளனர். தெலுங்கு நடிகர் பிரபாஸ் ரூ.1 கோடி கொடுத்திருக்கிறார். இந்நிலையில், நடிகர் விஜய் இன்று கேரளா நிவாரண நிதிக்கு ரூ.70 லட்சம் வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் உள்ள ரசிகர்கள் மூலமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவியை விஜய் அனுப்பியுள்ளார். 
 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored