`மீனவர்களை வஞ்சிக்கும் செயல்!’ - உடன்குடி நிலக்கரி இறங்குதளம் திட்டத்துக்கு எதிராக மீனவர்கள்Sponsoredஉடன்குடி அனல்மின்  நிலையத் திட்டத்துக்காக கல்லாமொழியில் அமைய உள்ள இறங்குதளம் திட்டத்தை எதிர்த்து, மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக  தூத்துக்குடி மாவட்ட நாட்டுப் படகு மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

துாத்துக்குடி மாவட்டம் உடன்குடியில், 1,600 மெகா வாட்ஸ்  மின்சார உற்பத்தித்திறன் கொண்ட அனல்மின் நிலையம் அமைக்கும் பணிகள்  நடைபெற்று வருகின்றன. இந்த அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி கொண்டு வர, திருச்செந்துார் அருகே உள்ள கல்லாமொழி கடல் பகுதியில் நிலக்கரி இறங்குதளம் அமைக்க அரசு திட்டமிட்டு, பணிகளைச் செய்துவருகிறது. இந்த இறங்குதளம் அமைந்தால், கடல்வளம் பாதிக்கப்படும். மீனவர்களின் வாழ்வாதாரம் கெடும் எனக் கூறி, இறங்குதளம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடக் கோரி, முதல்வருக்கு நாட்டுப்படகு மீனவர்கள் மனு அளித்துள்ளனர்.

Sponsored


இதுகுறித்து, துாத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு, பைபர் படகு மீனவர்கள்  சங்கத் தலைவர்  கயாஸ் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம்  கூறுகையில்,``நீர், நிலம், காற்று, சுற்றுச்சூழலை பாதிப்பதால், நிலக்கரி பயன்பாட்டை ஐரோப்பிய நாடுகள் தடை செய்துவருகின்றன. இந்நிலையில், தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்ற, நீர், காற்று, அனல், அணு, சூரிய சக்தியிலிருந்து  மின்சாரம் உற்பத்திசெய்யத் திட்டமிட்டுள்ளது. இதற்காகக் கடந்த 2009-ம் ஆண்டு நிறுத்திவைக்கப்பட்ட உடன்குடி அனல்மின் நிலையத் திட்டத்தை மீண்டும் அரசு செயல்படுத்த உள்ளது. மத்திய அரசின் (CRZ -2011) கடல் மேலாண்மை மண்டலப் பகுதியான கன்னியாகுமரி முதல் ராமநாதபுரம் வரை உள்ள 365 கி.மீ கடற்கரையில் 500 மீட்டர் தூரமும், கடலில் இருந்து 12 கடல்மைல் தூரம் வரை எவ்வித கட்டுமானமும் அமைக்கக் கூடாது என்ற விதியுள்ள நிலையில், உடன்குடி மின் திட்டத்துக்கான பணிகளைச் செயல்படுத்த முயற்சிப்பது சட்டவிரோதமாகும்.

Sponsored


கல்லாமொழி பகுதியில், 8 கடல் மைல் தொலைவில் கடலில் அமைய  உள்ள பாலத்துக்காகத் துாண்கள் அமைக்க இருப்பதால், கடல் இரண்டாகப்  பிரிக்கப்படுவதோடு, பவளப்பாறைகள் அழியவும் வாய்ப்புள்ளது. இப்பாலத்தைச் சுற்றியும்  நிலக்கரிக் கப்பல் வரும் பகுதியில்  சில கி.மீ., துாரத்துக்கு மீன் பிடிக்கக் கூடாது எனக் கூறுவது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் செயல். அதேபோல, கொதிநீர் குளிர்ந்த பிறகே கடலில் கலக்கப்படும், சாம்பல் கடலில் கொட்டப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. திருச்செந்தூருக்கு வடக்கே துாத்துக்குடி அனல் மின் நிலையம், தெற்கே கூடங்குளம் அணுமின் நிலையம் உள்ள நிலையில், இடைப்பட்ட  பகுதியில் உள்ள கடல் பகுதியில் நிலக்கரி இறங்குதளத்துக்காக ஆக்கிரமிப்பது மீனவர்களை வஞ்சிக்கும் செயல். 

உடன்குடி அனல்மின் நிலையத்துக்குத் தேவையான நிலக்கரியை தூத்துக்குடியிலிருந்து லாரிகள் மூலமாகவோ, ரயில்கள் மூலமாகவோ கொண்டுவரலாம்; அதற்கான பாதைகள் உள்ளன. கடல் வளத்தை அழிக்கும் கல்லாமொழி அனல்மின் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். அதேபோல, நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்களுக்கு இடையேயான பிரச்னைகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு  பல புகார் மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை எதிர்த்து, மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்” என்றார்.Trending Articles

Sponsored