வடகிழக்குப் பருவமழையை சமாளிக்கத் தயார் நிலையில் சிவகங்கை - ஆட்சியர் லதா தகவல்



சிவகங்கை மாவட்டத்தில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் லதா தெரிவித்திருக்கிறார்.    

Sponsored


வடகிழக்குப் பருவமழை தொடங்க இருப்பதை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் தடுப்புப் பணிகள் மாவட்டம் முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 12 வட்டாரங்களிலும் ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் தலா 20 மஸ்தூர் பணியாளர்களும் பொது சுகாதாரத்துறையின் மூலம் தலா 10 மஸ்தூர் பணியாளர்களும் 12 பேரூராட்சிகளுக்கு தலா 10 மஸ்தூர் பணியாளர்களும் சிவகங்கை நகராட்சிக்கு 20 மஸ்தூர்களும், காரைக்குடி நகராட்சிக்கு 60 மஸ்தூர்களும், தேவகோட்டை நகராட்சிக்கு 40 மஸ்தூர்களும், சிவகங்கை, இளையான்குடி பகுதிகளுக்குக் கூடுதலாக தலா 10 மஸ்தூர்களும், சாக்கோட்டை பகுதிக்குக் கூடுதலாக 30 மஸ்தூர்களும் சேர்த்து மொத்தம் 650 மஸ்தூர்கள் நியமிக்கப்பட்டு சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் மேற்பார்வையில் காய்ச்சல் கண்காணிப்பு பணி, கொசுப்புழு ஒழிப்பு பணி, அபேட் மருந்து தெளிக்கும் பணி, கொசு மருந்து அடிக்கும் பணி  என ஒட்டுமொத்த துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காய்ச்சல் நோயாளிகள் பற்றிய விவரங்கள் அனைத்து அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளிலும், தினசரி அறிக்கை பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு அதனடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Sponsored


பிளீச்சிங் பவுடர், அபேட், பைரித்திரம், மருந்துகள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தினசரி குடிநீர் விநியோகம் குளோரினேசன் செய்து விநியோகிக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிநீரில் குளோரின் அளவு சுகாதார ஆய்வாளர்கள் மூலம் பரிசோதித்து அறிக்கை பெறப்பட்டு வருகிறது. மருந்து மாத்திரைகள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் பாதித்த பகுதிகளில் துரித செயல்பாட்டுக் குழு மூலம் மருத்துவ முகாம் நடத்தப்பட்டுக் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

Sponsored


பொதுமக்கள் அனைவரும் மழைக்காலங்களில் பரவும் நோய்களான வயிற்றுப்போக்கு , மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்களை வராமல் தடுக்க குடிநீரை நன்றாகக் காய்ச்சி ஆறவைத்த பிறகு குடிக்க வேண்டும். மேலும் தண்ணீர் சேமித்துவைத்திருக்கும் பாத்திரங்களை மூடிவைப்பதன் மூலமும் தண்ணீர் தொட்டிகளை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடர் கொண்டு நன்கு தேய்த்து சுத்தம் செய்து காயவைத்து பின்னர் தண்ணீரை நிரப்ப வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார் மாவட்ட ஆட்சித் தலைவர் லதா.



Trending Articles

Sponsored