ஓணம் பண்டிகை - கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை அறிவிப்புSponsoredஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரும் 25-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தின் முக்கிய விழா ஓணம் பண்டிகை. இதை கேரள மாநிலத்தில் விதவிதமாகக் கொண்டாடுவார்கள். மழை பாதிப்பு காரணமாக கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு அரசு சார்பில் நடத்தப்படும் ஓணம் பண்டிகை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், குறைந்த அளவு மழை பாதிப்புகொண்ட திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களில் மக்கள் ஓணம் பண்டிகைக்கு தயாராகி வருகிறார்கள். அதுபோல கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். ஓண ஊஞ்சல், அத்தப்பூ கோலம் என ஓணம் பண்டிகை அமர்க்களப்படும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் மலர்களால் அத்தப் பூ கோலங்கள் போட்டு வருகின்றனர். ஓணம் பண்டிகையான வரும் 25-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored