பாலியல் புகார் கூறிய போலீஸ் பெண் எஸ்.பி இடமாற்றம் ஏன்? - கமிட்டிக்குப் போகும் ரகசிய ஃபைல்Sponsoredகடவுளின் பெயரைக் கொண்ட போலீஸ் ஐ.ஜி மீது பாலியல் புகார் கொடுத்த பெண் எஸ்.பி, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரின் இடமாற்றம் போலீஸாரிடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கடவுளின் பெயரைக் கொண்ட போலீஸ் ஐ.ஜி, தமிழக காவல்துறையின் சிறப்பு பிரிவில் பணியாற்றுகிறார். இவர் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் எஸ்.பி. பாலியல் புகார் கொடுத்தார். புகார் கொடுக்கப்பட்ட அந்த பெண் எஸ்.பி, நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து 16 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல்துறையில் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றத்துக்குப் பின்னணியில் ஒரு சில காரணங்கள் இருக்கும். ஆனால், நேற்று இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளில், போலீஸ் ஐ.ஜி மீது பாலியல் புகார் கொடுத்த பெண் எஸ்.பி உள்ளார். அவரின் இடமாற்றம் தமிழக காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Sponsored


இதுகுறித்து போலீஸ் உயரதிகாரிகளிடம் பேசினோம். 

Sponsored


 ``போலீஸ் ஐ.ஜி மீது புகார் கொடுத்த பெண் எஸ்.பியின் புகாரையும் அவர் கொடுத்த ஆதாரங்களையும் ஆய்வு செய்தோம். அப்போது அவருக்கு வந்த மெசேஜ்கள் எந்த நம்பரிலிருந்து அனுப்பப்பட்டவை என்று விசாரணை நடந்துவருகிறது. எங்களின் முதல்கட்ட விசாரணையில் பெண் எஸ்.பி. குற்றம் சாட்டிய ஐ.ஜி தரப்பு செல்போன் நம்பரிலிருந்தே மெசேஜ்கள் வந்துள்ளன. ஐ.ஜி மீது புகார் கொடுத்த பெண் எஸ்.பி, தற்போது விடுப்பில் உள்ளார். அவர் எங்களிடம் புகார் கொடுக்கும்போதே சில கோரிக்கைகளை முன்வைத்தார். அதில் ஒன்று இடமாற்றம். இந்தப் புகாருக்குப்பிறகு `இனிமேல் ஐ.ஜியின் கீழ் என்னால் பணியாற்ற முடியாது. நீங்கள் என்னை இடமாற்றம் செய்யவில்லை என்றால் நான் வி.ஆர்.எஸ். கொடுத்துவிடுவேன்' என்றும் கூறினார். இதனால்தான் அவரை உடனடியாக அங்கிருந்து இடமாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

அடுத்து, பெண் எஸ்.பியின் (ரெக்கார்டு) ஆண்டறிக்கையில் அவருக்கு எதிராக ஐ.ஜி எந்தவித ப்ளாக் மார்க்கும் போட அனுமதிக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டார். அதைத் தடுக்க, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதோடு பாலியல் புகார் கொடுத்த உயரதிகாரியின் கீழ் இனிமேல் அவர் பணியாற்றுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. அதையும் கருத்தில் கொண்டுதான் இடமாற்றினோம். அவருடன் இடமாற்றம் செய்யப்பட்ட மற்ற போலீஸ் அதிகாரிகளின் பட்டியல் ஏற்கெனவே தயாராகத்தான் இருந்தது. அதோடு சேர்த்து பெண் எஸ்.பிக்கும் இடமாறுதல் உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இடமாறுதல் செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு எந்தவித சிக்கலும் ஏற்படாது. 

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட ஐ.ஜி குறித்து ரகசிய விசாரணை நடத்தப்பட்டதில், முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, அவர் இதற்கு முன்பு பணியாற்றிய இடங்களில் அவரின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் உளவுத்துறை மூலம் சேகரிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான ஃபைல் ஒன்று தமிழக காவல்துறை தலைமையிடத்தில் தயாராக உள்ளது. அந்த ஃபைலில் இருக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே ஐ.ஜி மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், ஐ.ஜிக்கு ஆதரவாக சில தரப்பிலிருந்து பிரஷர் வருவதால் விசாகா கமிட்டியின் விசாரணைக்குப்பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று ஃபைல், டி.ஜி.பி அலுவலக உயரதிகாரியிடம் பாதுகாப்பாக இருக்கிறது. 

புகார் கொடுத்த பெண் எஸ்.பியிடமும் அவரின் நெருங்கிய போலீஸ் உயரதிகாரிகளிடமும் சில தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அப்போது, சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஒருவராலும், ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் இருக்கும் தென்மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ் உயரதிகாரிகளாலும் ஏற்கெனவே அவர் பாதிக்கப்பட்டுள்ள தகவல் கிடைத்துள்ளது. பெண் எஸ்.பி விவகாரத்தை முழுமையாக விசாரித்தால் தமிழக காவல்துறையில் பசுந்தோல் போர்த்திய புலிகளாக வலம் வரும் உயரதிகாரிகள் சிக்குவார்கள்" என்றனர். 

போலீஸ் ஐ.ஜி, பெண் எஸ்.பி ஆகியோருக்கு ஆதரவாக ஐ.பி.எஸ் அதிகாரிகளிடமிருந்து பெரியளவில் ஆதரவுக் குரல் எழவில்லை. ஆனால், ஐ.ஜி-க்கும் பெண் எஸ்.பிக்கும் வேண்டப்பட்டவர்கள் டி.ஜி.பி அலுவலகத்திலும் அரசுத் துறையில் முக்கியப் பதவிகளில் உள்ளனர். பெண் எஸ்.பி, தனக்குத் தெரிந்தவர்கள் மூலம்தான் இந்தப் பாலியல் புகாரை வெளியில் கொண்டு வந்தார். முதலில் பெண் எஸ்.பி கொடுத்த புகாரை ஐ.ஜி தரப்பு, டி.ஜி.பி அலுவலகத்துக்குள்ளேயே பேசி முடித்துக்கொண்டுள்ளது. அப்போது இந்தத் தகவல் வெளியில் தெரிந்தால் ஒட்டுமொத்த தமிழக காவல்துறைக்குத்தான் அவமானம் என்று பெண் எஸ்.பியிடம் அறிவுரை கூறப்பட்டது. அதன்பிறகும் ஐ.ஜி-யின் நடவடிக்கை மாறாததால்தான் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் ஆகியோரைச் சந்திக்க பெண் எஸ்.பி முடிவெடுத்துள்ளார். அவருக்குப் உறுதுணையாக அவரின் குடும்பத்தினரும் உள்ளனர். புகார் கொடுக்க செல்லும்போதுகூட குடும்பத்தினருடன்தான் பெண் எஸ்.பி சென்றுள்ளார். அதே நேரத்தில் பாலியல் புகாரை எதிர்கொள்ள ஐ.ஜி தயாராக இருக்கிறார். அவரும் சில தகவல்களை விசாகா கமிட்டியிடம் கொடுக்க ஃபைலோடு காத்திருக்கிறார். இருவரின் ஆதரவாளர்கள் வைக்கும் செக்குகளைத் தாண்டி உண்மைகள் வெளியில் வருமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.Trending Articles

Sponsored