`இது சிலையா இல்லை நிஜமா!’ - மெரினாவை ஆச்சர்யப்படுத்திய சிற்பக் கலைஞர்Sponsoredசென்னை, மெரினா கடற்கரையிலுள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு, கருணாநிதியின் உருவச் சிலைகளை, சிற்பி ஒருவர் கொண்டு வந்தார். பொதுமக்கள் அந்தச் சிலைகளை ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர். 

சென்னை, மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பொதுமக்கள் பலரும் வந்து, அஞ்சலி செலுத்திவருகின்றனர். இன்று, திருவள்ளூர் செங்குன்றத்தைச் சேரந்த சிலைவடிவமைப்பாளர் முருகன் என்பவர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு வந்தார். அவர், ஆளுயரத்துக்கு கருணாநிதியின் உருவத்தில் இரண்டு சிலைகள் செய்து எடுத்துவந்தார். கருணாநிதி உட்கார்ந்திருந்து எழுதுவதற்கு யோசிப்பது போன்று ஒரு சிலையும், நிற்பது போன்ற மற்றொரு சிலையும் கொண்டு வந்திருந்தார்.

Sponsored


Sponsored


அந்த இரண்டு சிலைகளும் அச்சு அசலாக கருணாநிதியின் உருவத்தை ஒத்திருந்தது. `அச்சு அசலா தலைவர் மாதிரியே இருக்கு பாரேன்...’ என்று பேசியபடி பொதுமக்கள் கடந்து சென்றனர். 

இதுகுறித்து சிலை வடிவமைப்பாளர் முருகனிடம் பேசும்போது, 'செங்குன்றம் அருகில் சிலை வடிவமைக்கும் தொழில் செய்துவருகிறேன். கருணாநிதியின் சிலைகளை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வைக்க விரும்பினேன். அதற்காகத்தான் கொண்டுவந்தேன். இதுதொடர்பாக எம்.எல்.ஏ சேகர் பாபுவைத் தொடர்புகொண்டேன். அவர், ஒரு சில நாள்களில் சிலையை வைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று தெரிவித்தார்.

கருணாநிதியின் உருவத்தில் எட்டு சிலைகள் செய்துள்ளேன். உட்கார்ந்திருப்பது போலவும், நிற்பது போலவும், நின்று கொண்டு கையை உயர்த்திக் காண்பிப்பது போலவும் வித்தியாசமான முறைகளில் சிலை செய்துள்ளேன். அனைத்தும் பைபரில் செய்யப்பட்ட சிலைகள். உட்கார்ந்திருக்கும் சிலை செய்வதற்கு ஒன்றரை லட்ச ரூபாயும் நிற்கும் சிலை செய்வதற்கு 80,000 ரூபாயும் செலவானது. இந்தச் சிலைகள் செய்வதற்கு 25 நாள்கள் தேவைப்பட்டது' என்று தெரிவித்தார். Trending Articles

Sponsored