4 மணி நேரத்தில் கேரளாவுக்காக ரூ.39,499 நிவாரண நிதி திரட்டிய ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள்!Sponsoredகேரள மக்களுக்காக வெள்ள நிவாரண நிதி கேட்டு ஒவ்வொரு வகுப்பறையாகச் சென்ற 4 மாணவர்கள் மற்றும் பேராசிரியர் ஆகியோர் சுமார் 4 மணி நேரத்தில் ரூ.39,499 வசூல் செய்தார். அந்த தொகை கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதி கணக்கில் செலுத்தப்பட உள்ளது. 

கடந்த 8-ம் தேதி முதல், தாெடர்ந்து 9 நாள்கள் வரலாறு காணாத பலத்த மழை பெய்ததில், கேரள மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களும் கடும் சேதத்தைச் சந்தித்துள்ளன. பெரும்பாலான மக்கள் தங்கள் வீடு, உடைமைகள் என அனைத்தையும் இழந்து, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தமிழகம் மட்டுமல்லாது நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நிவாரண உதவிகள் தாெடர்கின்றன. இந்நிலையில், ஊட்டி கலைக் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மற்றும் என்.சி.சி., மாணவர்கள் நவ்ஷாத், டாேமினிக், சூரியா, ராஜேந்திரன் ஆகியோர் தமிழ் உதவிப் பேராசிரியர் மணிவண்ணனிடம் நாமும் கேரள மக்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என முறையிட்டனர். இதையடுத்து, அவர்கள் 5 பேரும் கல்லுாரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தியிடம் அனுமதி பெற்று, கல்லுாரியில் உள்ள 13 துறைகளின் சுமார் 75 வகுப்பறைக்குச் சென்று நிவாரண நிதி வசூலித்தனர். சுமார் 4 மணி நேரத்தில் நிவாரண நிதியாக 39,499 ரூபாயை மாணவர்கள் வழங்கியுள்ளனர். 

Sponsored


Sponsored


இதுகுறித்து ஊட்டி அரசு கலைக் கல்லுாரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் போ.மணிவண்ணன் கூறுகையில்,‛‛முன்னறிவிப்பில்லாமல் திடீரென ஒவ்வொரு வகுப்பறையாகச் சென்று கேரள மக்கள் சந்தித்துள்ள பேரிடர் குறித்து ஓரிரு வார்த்தைகள்கூட சொல்வதற்கு முன்பாகவே மாணவ, மாணவியர் தங்கள் பயணச் செலவுக்காக, சிற்றுண்டிக்காக வைத்திருந்த சிறு சிறு தாெகையைகூட நிதியாக வழங்கி, எங்களை ஆச்சர்யப்படுத்தினர். கல்லூரியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள், ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தில் இருந்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை நாங்கள் முன்னறிவிப்பு வெளியிட்டு, கேரள மக்களுக்கு மாணவர்கள் நிவாரண நிதி வழங்கக் கேட்டிருந்தால், தற்போது வசூலாகியுள்ள தாெகையைவிட பெரும் தாெகை வசூலாகியிருக்கும். இந்நிகழ்வின் மூலம் மாணவர்களிடம் மனித நேயம் துளிர்விடத் தொடங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது’’என்றார். Trending Articles

Sponsored