வேட்டி சட்டையில் ஜெயக்குமார்; கோட்டு சூட்டில் விஜயபாஸ்கர் - தமிழக அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள்!Sponsoredதமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியில் இந்தியா சார்பில் சிறப்பு அழைப்பாளராகப் பங்குபெற்றுள்ளார். 


 

ஜப்பானில் இன்று தொடங்கி வரும் 24-ம் தேதிவரை, 20 வது ஜப்பான் சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை ஜப்பான் வெளியுறவு வர்த்தக அமைப்பு (ஜெட்ரோ) நடத்துகிறது. இந்தக் கண்காட்சியில், மீன்வளத்துறை இயக்குநர் ஜி.எஸ்.சமீரான், ராமநாதபுரம் மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோருடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டிருக்கிறார்.  இந்தப் பயணத்துக்கு ஆகும் செலவு அனைத்தையும் அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது. `அமைச்சர் ஜெயக்குமார் சுற்றுலாச் செல்லும் இந்தக் காலகட்டம். அவரது பணிக்காலமாகக் கருதப்படும்’ என்றும் தமிழக அரசு அறிவித்தது.  

Sponsored


இன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சர்வதே கடல் உணவு மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சியின் தொடக்க விழாவில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார், தமிழர்களின் பாரம்பர்ய உடையான வேட்டி சட்டை அணிந்து சென்றிருந்தார். அவரைத் தவிர அந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவரும் கோட்டு சூட்டு அணிந்திருந்தனர். சர்வதேச அரங்கில் இந்தியா சார்பில் சிறப்பு அழைப்பாளராக தமிழக அமைச்சர் பங்கேற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.    

Sponsored


இதனிடையே, விபத்து மற்றும் அவசரச் சிகிச்சை திட்டம் குறித்த தகவல் பரிமாற்றத்துக்காக அரசு முறை பயணமாகச் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.


 

அங்கு மெல்பர்ன் நகரில் உலகப் புகழ் பெற்ற அல்ப்ரெட் மருத்துவமனையின் அதிநவீன விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவையும் ஆம்புலன்ஸ் சேவை பிரிவையும் விஜயபாஸ்கர் பார்வையிட்டார். ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலப் பாராளுமன்றத்தில், தமிழ்நாட்டில் விபத்து காய சிகிச்சை மையங்களை உருவாக்கி உயிரிழப்புகளைத் தடுக்க முனைப்பான நடவடிக்கையாக ஆஸ்திரேலியாவுடன் தமிழக அரசு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (Statement of Intent) கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  Trending Articles

Sponsored