படிப்புக்காகச் சேர்த்துவைத்த 52,000 ரூபாய் பணத்தை கேரளாவுக்குத் தந்த சிறுமி!கேரளா வெள்ளம், உலகெங்கும் இருக்கிற மனிதத்தை உயிர்ப்பிக்கச்செய்துள்ளது. கேரளாவுக்கான உதவிகள், பல பகுதிகளிலிருந்து வந்து கொண்டேயிருக்கின்றன. இதில், நெகிழ்ச்சியடைய வைக்கும் பல சம்பவங்கள் ஆங்காங்கே நடந்துள்ளன. விழுப்புரம் சிறுமி, சைக்கிள் வாங்க சேமித்த பணத்தை கேரளா வெள்ள நிவாரணத்துக்கு வழங்கியதைப் பலரும் அறிவர்.

Sponsored


இப்போது, மதுரையைச் சேர்ந்த விக்ரமன் என்பவருடைய மகள் ஹெப்ரான் ஜோன்னா (HEPRON JOANNA) என்கிற ஐந்தாவது படிக்கும் சிறுமி, தன்னுடைய உயர் படிப்புக்காக சேர்த்துவைத்திருந்த 52 ஆயிரம் ரூபாயை கேரளா வெள்ள நிவாரணத்துக்காக வழங்கியிருக்கிறார். ஹெப்ரானுடைய குடும்பத்தினர், கேரளா வெள்ள நிவாரணத்துக்குப் பல உதவிகளையும் செய்திருக்கிறார்கள். இதைப் பார்த்த ஹெப்ரான், தானும் உதவி செய்தாக வேண்டுமென்று முடிவுசெய்து, சேமித்த மொத்த பணத்தையும் வழங்கியிருக்கிறார். இதற்கு அவர் பெற்றோரும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.

Sponsored


Sponsored


பேரிடர் காலங்களில் நமக்குக் கிடைக்கும் ஒரே நல்ல விஷயம் மனிதத்தை எடுத்துச்சொல்லும் இதுபோன்ற நிகழ்வுகள்தான்.Trending Articles

Sponsored