முக்கொம்பு அணையில் 8 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது; திருச்சியில் வெள்ள அபாய எச்சரிக்கை!Sponsoredதிருச்சி மாவட்டத்தில் முக்கொம்பு மேலணையில் உள்ள 8 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில வாரங்களாகப் பெய்துவந்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஏற்கெனவே கடந்த சில தினங்களுக்கு முன்னர், காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டபோது கொள்ளிடம் பாலம் உடைந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த நிலையில், இன்று இரவு சுமார் 9 மணியளவில் முக்கொம்பு மேலணையில் உள்ள 8 மதகுகள் திடீரென ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 

Sponsored


Sponsored


திருச்சியில் இருந்து முசிறி செல்லும் பாதையில் முக்கொம்பு பகுதியில் இந்தப் பாலம் உள்ளது.  இந்தப் பாலத்தில் உள்ள 7 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மொத்தம் இந்தப் பாலத்தில் 45 மதகுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. பாலம் அடித்துச் செல்லும்போது பாலத்தில் பயணம் செய்து கொண்டிருந்தவர்கள் இருபுறமும் திரும்பிச் சென்றுவிட்டதால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

மதகுகள் அடுத்துச் செல்லப்பட்டதால் கூடுதல் தண்ணீர் தற்போது வெளியேறி வருகிறது. இதனால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி உடனடியாக ஆய்வு மேற்கொண்டார். தற்போது மற்ற மதகுகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. Trending Articles

Sponsored