ஆளுநருக்காக அகற்றப்பட்ட ஸ்பீட் பிரேக்கர்கள்! விபத்தில் பலியான தந்தை, மகள்Sponsoredநெல்லைக்கு ஆளுநர் வருகையின்போது எடுக்கப்பட்ட ஸ்பீட் பிரேக்கர்கள் மீண்டும் அமைக்கப்படாததால் அதிவேகத்தில் வந்த அரசுப் பேருந்து மோதியதில் பள்ளிக் குழந்தையும் அவரின் தந்தையும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 

பாளையங்கோட்டை ஆதித்தனார் நகரைச் சேர்ந்தவர் சத்யநாராயணா. எலெக்ட்ரீசியன் தொழில் செய்துவரும் இவர், தனது 6 வயது மகள் சாஹாவை பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள பள்ளியில் முதலாம் வகுப்பு படித்துவரும் மாணவியுடன் அவர் சென்றபோது எதிரே வந்த அரசுப் பேருந்து அவரது வாகனத்தில் நேருக்கு நேராக மோதியது. இதில், சத்யநாராயணாவும் அவரது மகள் சாஹாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Sponsored


இந்த விபத்துக்கு அரசுத் துறையினரின் அலட்சியமே காரணம் எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஜூலை 31-ம் தேதி நடைபெற்றது. அதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டார். அவரது வருகையின்போது, வழியெங்கும் சாலையில் இருந்த வேகத்தடுப்புகளை அதிகாரிகள் அவசரகதியில் அகற்றினார்கள். ஆளுநர் வந்து சென்று ஒரு மாதமான நிலையில், இதுவரையிலும் வேகத்தடுப்புகளை மீண்டும் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன் காரணமாக நெல்லையில் இதுவரையிலும் பல்வேறு விபத்துகள் ஏற்பட்டு வருவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதனால், முக்கிய சாலைகளில் விரைவில் வேகத்தடுப்பு அமைப்புகளை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

Sponsored


அத்துடன், கண்டக்டர் இல்லாப் பேருந்துகள் இயக்கப்படுவதும் இந்த விபத்துக்குக் காரணம் என்கிற புகார் எழுந்துள்ளது. இந்த விபத்தை ஏற்படுத்திய தூத்துக்குடி செல்லும் கண்டக்டர் இல்லாத பேருந்து வழக்கமான வழித்தடத்தில் வராமல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய சாலையில் வந்துள்ளது. எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் புதிய சாலையில் இஷ்டப்படி இயக்கப்பட்ட பேருந்தின் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதனால் இனியாவது அதிகாரிகள் உயிர்களின் முக்கியத்துவம் அறிந்து செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள். Trending Articles

Sponsored