சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ரியோ ஹீரோ!Sponsoredஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சத்யராஜ் நடித்து வெளியாகவிருக்கும் 'கனா' திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இப்படம் மகளிர் கிரிக்கெட் சார்ந்த ஒரு படமாக எடுக்கப்பட்டுள்ளது. மகளிர் கிரிக்கெட்டில் நேரும் பிரச்னைகள், பெண்களுக்கு விளையாட்டில் மறுக்கப்படும் உரிமைகள் பற்றி இப்படம் பல்வேறு கோணத்தில் கூறவுள்ளது. இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பில் இரண்டாவது படத்தை தயாரிக்கவிருக்கிறார். இதில் ஹீரோவாக விஜய் டிவி புகழ் ரியோ ராஜ் நடிக்கிறார். 

இந்த அறிவிப்பை இன்று சென்னை சத்யம் தியேட்டரில் நடந்த 'கனா' படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். இப்படத்தை ப்ளாக் ஷீப் குழு இயக்கவிருக்கிறது. சுட்டி அரவிந்த், ஆர்ஜே விக்னேஷ், அன்பு தாசன் உட்பட 20 பேர் கொண்ட பிளாக் ஷீப் குழுவை மேடையில் சிவகார்த்திகேயன் அறிமுகப்படுத்திப் பேசுகையில், ``நான் சம்பாதிக்கும் காசு எனக்கு மட்டுமல்லாமல் என்னோட இருப்பவர்களுக்கும் பிரயோஜனமாக இருக்க வேண்டும். என்னால் முடிந்தவரை இதுபோன்று சினிமாவில் இருப்பவர்களை முன்னேற்ற முயற்சி செய்வேன். அதற்காகத்தான் இம்மாதிரியான படங்களைத் தொடர்ந்து தயாரித்து வருகிறேன்" என்று கூறினார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored