`பேராசிரியர் விஷயத்தை இதோடு மறந்துவிடு'- மாணவியை மிரட்டும் பெண் விடுதிக் காப்பாளர்கள்



பேராசிரியரால் பாலியல் தொல்லைக்கு ஆளான கல்லூரி மாணவியை அரசு விடுதிப் பெண் காப்பாளர்கள் மிரட்டும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sponsored


திருவண்ணாமலை மாவட்டம், வாணாபுரம் அருகே உள்ள வாழவச்சனூரில், அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் உள்ளது. கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும்  இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவருக்கு, அங்கு பணியாற்றும் பேராசிரியர் தங்கபாண்டியன் (40) கடந்த ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து மாணவியின் விடுதிக்குச் சென்று, பாலியல் தொல்லைகொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு, விடுதிக் காப்பாளர்கள் மைதிலி மற்றும் இன்னொரு பெண் காப்பாளர் இருவரும் பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவியிடம், 'பேராசியருக்கு உதவும் விதத்தில் இந்த விஷயத்தை இதோடு மறந்துவிடு. பிரச்னைகள் வராமல் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறி ,அந்த மாணவியை சமாதானப்படுத்துகின்றனர். அந்தக் காப்பாளர்கள் சமாதானப்படுத்துவதை ஆடியோவாகப் பதிவுசெய்து, அந்த மாணவி வெளியிட்டுள்ளார்.

Sponsored


அந்த ஆடியோவில், "நாளு சுவற்றுக்குள் நடந்தது; இதப் பெருசு பண்ணாத. இது சின்ன விஷயம். இதுல ஒண்ணுமே இல்ல. அது அதுங்க மறந்துட்டு கல்யாணம் பண்ணிக்கினு அமைதியா போய் இருக்குங்க. இது நீ நினைக்கிற மாதிரி இல்ல. நீ என்ன ஆக்‌ஷன் எடுக்க முயற்சித்தாலும் முடியாது. நாங்க எல்லாத்தையும் ரெடிபண்ணி வச்சுட்டோம்"  என அந்த ஆடியோ 6 நிமிடங்கள் மற்றும் இரண்டு ஆடியோ 4 நிமிடம் 30 நொடியும் நீள்கிறது.

Sponsored


இதுகுறித்து கல்லூரி மாணவி தனது பொற்றோர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பெற்றோர்கள் தமது மகளுக்கு நியாயம் வேண்டும் என்று வாழவச்சனூர் பொதுமக்களிடம் அழுது புலம்பியுள்ளார்கள். பெற்றோர் மற்றும் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள், நேற்று முன்தினம் (21-ம் தேதி)  மதியம் 1 மணியளவில் கல்லூரிக்கு சென்று, மாணவிக்கு பாலியல் தொல்லைகொடுத்த ஆசிரியர் மற்றும் விடுதிக் காப்பாளர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கல்லூரி முதல்வரிடமும் பேராசிரியர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்கள்.

இதையடுத்து, போலீஸ் துணை சூப்பரின்டென்டென்ட் பழனி, சப்-இன்ஸ்பெக்ட்டர் சுபா, வாணாபுரம் வருவாய் ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் கல்லூரிக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, நேற்று இந்த பாலியல் குற்றச்சாட்டை நேரடியாக எடுத்துக்கொண்ட மாவட்ட நீதிபதி மகிழேந்தி, பாதிக்கப்பட்டதாகச் சொல்லும் பெண்ணிடமும், பேராசிரியரிடமும், விடுதிக் காப்பாளர்களிடமும் தனித்தனியாக நேற்று விசாரணை நடத்தினர். அதோடுமட்டுமின்றி, கல்லூரிக்கும் சென்று மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது அவர் கூறும்போது' "சில பேராசிரியர்கள் தன் கீழ் பயிலும் மாணவிகளிடமே தவறாக நடந்துகொள்வது தலைகுனிவை ஏற்படுத்துகிறது. இன்னும் பல்கலைக்கழகங்களில் எத்தனை எத்தனை நிர்மலாதேவிகள் உள்ளார்களோ எனத் தெரியவில்லை. மனித உரிமைகள் ஆணையம் இங்கேயே 4 நாள்கள் தங்கி விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளேன். மேலும் அந்த மாணவியை வேறு கல்லூரிக்கு மாற்றி, அங்கு படிப்பைத் தொடர உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.



Trending Articles

Sponsored