அ.தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்!Sponsoredமறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு அ.தி.மு.க செயற்குழு கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒரு ஆண்டுக்குள்ளாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று அ.தி.மு.க செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, நடைபெறவுள்ளத் தேர்தலை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க தேர்தலை சந்திக்கவுள்ளது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் இந்தச் செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.

Sponsored


Sponsored


இந்தக் செயற்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்களும் பங்கேற்றுள்ளனர். இந்தச் செயற்குழு கூட்டத்தில், திருப்பரங்குன்றம், திருவாரூர் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், உறுப்பினர் சேர்க்கை குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயற்குழு கூட்டத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், கருணாநிதி, அ.தி.மு.க எம்.எல்.ஏ போஸ் ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.Trending Articles

Sponsored