காணாமல்போன மணமகன்; மணமேடையில் காத்திருந்த மணமகள்Sponsoredதிருப்பூரில், 3 ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்துவந்த நபர், திருமணத்தின்போது மாயமாகிப்போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அருகே, பெருமாள்பாளையம் பகுதியில் வசித்துவருபவர் சுமத்ரா. இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்தார். அப்போது,  தன்னுடன் பணிபுரிந்த செந்தில்குமார் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு, இவரும் கடந்த  3 ஆண்டுகளாகக் காதலித்துவந்துள்ளனர். 

Sponsored


இந்த நிலையில், கடந்த மாதம் இவர்களது காதல்குறித்து இருவரும் அவரவர் வீட்டில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து, சுமத்ராவுக்கும் - செந்தில்குமாருக்கும் முறைப்படி திருமண நிச்சயதார்த்தமும் முடித்துவைத்தனர். அதைத் தொடர்ந்து, இன்றைய தினம் இருவருக்கும் திருமணம் நடக்கவிருந்தது. அதற்காக திருப்பூர் அருகே ஊத்துக்குளி என்ற பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திருமண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்தன. திருமணத்துக்காக நேற்றைய தினம் முதலே பல்வேறு ஊர்களில் இருந்தும் உறவினர்கள் வந்து குவிந்திருந்தனர்.

Sponsored


3 ஆண்டு காதல் கைகூடிவரும் தருணத்தில், பெண் வீட்டார் அனைவரும் திருமண மண்டபத்தில் கூடியிருக்க, நேற்று இரவு முதலே மாப்பிள்ளை வீட்டார் மட்டும் மண்டபத்துக்கு வராமல் இருந்துள்ளனர். அதையடுத்து, மாப்பிள்ளை வீட்டாரிடம் பெண் வீட்டு உறவினர்கள் ஏன் மண்டபத்துக்கு வரத் தாமதிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, மாப்பிள்ளை வீட்டார் தொடர்ந்து மழுப்பலான பதில்களையே தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலையிலாவது மாப்பிள்ளையை அழைத்துக்கொண்டு மண்டபத்துக்கு வந்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்த பெண் வீட்டார் மத்தியில் மேலும் சோகமே நீடித்துவந்தது. ஒரு கட்டத்தில் குழப்பமாகிப்போன பெண் வீட்டார், நேரடியாக மாப்பிள்ளை வீட்டுக்கே சென்று விசாரித்தபோதுதான், நேற்று இரவில் இருந்தே மாப்பிள்ளையைக் காணவில்லை என்று பதில் சொல்லியிருக்கிறார்கள்.  பதறிப்போன பெண் வீட்டார், அலறியடித்துக்கொண்டு மண்டபத்துக்குச் சென்று உறவினர்களிடம் விவரத்தைத் தெரிவிக்க, தகவலைக் கேட்டு மணப்பெண் சுமத்ரா உட்பட அனைவரும் அதிர்ச்சியில் செய்வதறியாது திகைத்து நின்றிருக்கிறார்கள்.

3 ஆண்டுகள் தீவிரமாகக் காதலித்த நபர், திருமணம் நிச்சயிக்கப்பட்டு மணமேடை வரை வந்த பிறகு, திடீரெனக் காணாமல் போனதால், மணமகனின் பெற்றோர்மீது காவல் நிலையத்தில் மணப்பெண் புகார் அளித்திருக்கிறார். இதையடுத்து, ஊத்துக்குளி காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.Trending Articles

Sponsored