`வழக்கமான உணவுகள் மட்டும் போதாது' - கேரளாவுக்கு சிறுதானிய உணவுகளை அனுப்பும் ஐ.ஐ.எஃப்.பி.டி!



தஞ்சையில் இயங்கும் மத்திய அரசு நிறுவனமான இந்திய உணவுப் பதனீட்டு தொழில்நுட்பக் கழகம், கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 30 டன் பொருள்கள் அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளது. அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்கள் உடல் சோர்வுற்ற நிலையில் இருப்பார்கள் என்பதால் சிறுதானியங்களில் செய்த லட்டு, பிஸ்கட், முருங்கையிலை சூப், சிறுதானிய இட்லி - தோசை மிக்ஸ் உள்ளிட்ட சத்துமிக்க உணவுகளை இந்நிறுவனம் அனுப்புகிறது.

Sponsored


கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தரப்பில் இருந்தும் உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தஞ்சையில் இயங்கும் ஐ.ஐ.எஃப்.பி.டி நிறுவனம் தொலைநோக்கு பார்வையுடன் திட்டமிட்டு, 6 மாதங்கள் வரை கெட்டுப் போகாத பதப்படுத்தபட்ட உணவுப்பொருள்களைத் தயார் செய்து கேரளாவிற்கு அனுப்பும் ஏற்பாட்டில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக இந்நிறுவனத்தின் இயக்குநர் அனந்தராமகிருஷ்ணனிடம் பேசியபோது, ``பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஊட்டச்சத்துகள் மிக்க உணவுகள் மிகவும் அவசியம். இதனால்தான் சிறுதானியங்களில் செய்த லட்டு, பிஸ்கட், முருங்கையிலை சூப், சிறுதானிய இட்லி, தோசை மிக்ஸ், தேங்காய் குக்கீஸ், செறிவூட்டப்பட்ட சத்து மாவு பார்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்களைத் தயார் செய்ய முடிவெடுத்தோம். 

Sponsored


இதோடு அரிசி, ரவா, சேமியா, மசாலப் பொருள்கள் உள்பட 30 டன் பொருள்கள் அனுப்புறோம். உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்யும் பல்வேறு நிறுவனங்கள் இந்த முயற்சியில் எங்களோடு கைகோத்துள்ளன. இதைப் பேக்கிங் செய்யும் பணிகளில் கடந்த இரண்டு நாள்களாக எங்களது ஐ.ஐ.எஃப்.பி,டி நிறுவன ஊழியர்களும் மாணவர்களும் இரவு பகலாக ஈடுப்பட்டிருக்காங்க. விமானத்தின் மூலமாக 10 டன் நிவாரண பொருள்கள் அனுப்புவதற்குதான் முதலில் நாங்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், 30 டன் அளவுக்கு அதிகமானதால் விமானத்தில் அனுப்புவதற்கான வாய்ப்பு குறைவு. அதனால் ரயிலில் அனுப்ப திட்டமிட்டிருக்கோம்” என்றார். இவர்களது உயரிய நோக்கத்தைப் பல்வேறு தரப்பினரும் வியந்து பாராட்டுகிறார்கள்.  

Sponsored




Trending Articles

Sponsored