அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு - சிறப்பு வழக்கறிஞரை நியமித்தது தமிழக அரசு!Sponsoredஅயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட வழக்கில், சிறப்பு வழக்கறிஞரை நியமித்து உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு.

அயனாவரத்தில், பன்னிரண்டு வயது சிறுமி மனிதமிருகங்களால் ஆறு மாதங்களாக வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், 17 பேரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது காவல்துறை. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மயக்கமருந்து கொடுத்து, வல்லுறவில் ஈடுபட்டது விசாரணையின்போது தெரியவந்தது.

Sponsored


சென்னை மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவருகிறது. மத்திய புழல் சிறையில், நீதிபதிகள் ரோஹித்துரை, கலைப்பொன்னி முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அப்போது, குற்றம் சாட்டப்பட்டுள்ள 17 பேரையும் சிறுமி அடையாளம் காட்டியது குறிப்பிடத்தக்கது.

Sponsored


போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட இவர்களுக்கு ஆஜராகி வாதிட, சென்னை மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக்குழு நீதிபதி ஜெயந்தி தானாக முன்வந்து, 17 பேருக்கும் தனித்தனியாக வக்கீல்களை நியமித்தார். அதன்படி நியமிக்கப்பட்ட வக்கீல்கள் அனைவரும் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர். அதில், 6 பேரின் ஜாமீன் மனுக்களில் திருத்தம் இருந்ததால் திருப்பி அனுப்பட்டது. பின்னர் 11 பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை மகளிர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்தது. 

இந்நிலையில், அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராக ரமேஷை நியமித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. ரமேஷ்  மத்திய அரசின் அமலாக்கத்துறை சிறப்பு அரசுத்தரப்பு வழக்கறிஞராகவும், மத்திய அரசின் நிலை வழக்கறிஞராகவும், குடிநீர் வடிகால் வாரியத்தின் சட்ட ஆலோசகராகவும் செயற்பட்டு வருகிறார். 2003-2009  ஆம் ஆண்டுவரை நீதித்துறை நடுவராக பதவி வகித்தவர் ரமேஷ். தற்போது, அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளான வழக்கில் அரசுத்தரப்பின் சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.Trending Articles

Sponsored