பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட குழந்தைகள்... தமிழகத்தில் ஒரு பீகார் பயங்கரம்!Sponsoredதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறார் காப்பகத்தில் வசிக்கும் சிறுவர், சிறுமியர்களை அந்தக் காப்பகத்தின் வார்டன் பாலியல் வன்கொடுமை செய்வதாக அங்கு இருக்கும் பிள்ளைகள் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் சிறார் காப்பகங்களில் 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தகவல் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள சிறார் காப்பகங்களில் சமூகத் தணிக்கை மேற்கொள்ள மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் வழியாக ஆணைப் பிறப்பித்திருந்தது உத்தரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் இன்றுவரை இந்தத் தணிக்கைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கிடையே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறார் காப்பகத்தில் வசிக்கும் சிறுவர், சிறுமியர்களை அந்தக் காப்பகத்தின் வார்டன் பாலியல் வன்கொடுமை செய்வதாக அங்கு இருக்கும் பிள்ளைகள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து அந்தப் பிள்ளைகளைத் தற்போது காவல்துறையினர் மீட்டுள்ளனர். தற்போது குற்றம் சாட்டப்பட்ட காப்பகத்தின் வார்டன் விடுதி காப்பாளர் பாஸ்கர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Sponsored


பீகாரைப் போன்றதொரு சம்பவம் தமிழகத்திலும் நடந்திருப்பது சுற்றுவட்டாரப் பகுதியினரை அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. 

Sponsored
Trending Articles

Sponsored