கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் - பா.ஜ.க தலைவர் அமித் ஷா பங்கேற்பு



Sponsored



மறைந்த தி.மு.க தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டம் சென்னை நந்தனத்தில் வரும் 30-ம் தேதி நடைபெறவுள்ளது. அதில் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்கவுள்ளார். 

தி.மு.க தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7-ம் உயிரிழந்தார். அவருடைய உடல் சென்னை மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதிக்கு தி.மு.க சார்பில் ஆகஸ்ட் 30-ம் தேதி நினைவேந்தல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். அதில், 
இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்கிறார்.

Sponsored


மேலும், தமிழக பா.ஜ.க நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். தி.மு.க முன்னாள் எம்.பி.,  டி.ஆர் பாலு மு.க.ஸ்டாலின் சார்பாக அமித் ஷாவை அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். சென்னை பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாயின் அஸ்திக்கு தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி வந்து மரியாதை செய்தனர்.

Sponsored




Trending Articles

Sponsored