குடிமராமத்துப் பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு



`குடிமராமத்துப் பணிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.11.09 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளது' என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

Sponsored


தஞ்சை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் குடிமராத்துப் பணி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட 11.09 கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளார்கள். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இக்கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி, ``ஆறுகளில் தண்ணீர் கரை புரண்டோடும் நிலையிலும் கூட பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் மற்றும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்கள் அனைத்தும் தண்ணீர் வறண்டு கிடக்கிறது. 

Sponsored


தஞ்சை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் தூர் வாரும் பணி மேற்கொள்வதற்காக 11.09 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், அது முறையாக செலவு செய்யப்படாமல் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இதனால்தான் இப்பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை. முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இப்பகுதிகளுக்கு உடனடியாக தண்ணீர் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பட்டுக்கோட்டையில் ஆகஸ்ட் 24 தேதியிலிருந்து காத்திருப்புப் போராட்டம் நடத்தவுள்ளோம்.” என்றார். 

Sponsored




Trending Articles

Sponsored