``பவளப்பாறை வெளிர்நோய்” தூத்துக்குடியில் தொடங்கிய இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை!Sponsoredபவளப்பாறைகளில் பருவ மாற்றத்தால் ஏற்படும் வெளிருதல் நோயை சரியான முறையில் அளவிடவும், கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள, தேசிய அளவிலான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை இன்று தூத்துக்குடியில் தொடங்கியது.

பவளப் பாறைகள் கடலின் மழைக்காடுகள் என அழைக்கப்படுகின்றன. பல்வேறு பொருளாதார, சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த  கடல் உயிரினங்களுக்கு பவளப்பறைகள் அடைக்கலம் அளிக்கின்றன. விலங்கினத்தைச் சேர்ந்ததால், இப்பவளப் பாறைகள் பருவநிலை மாற்றம் காரணமாக பல்வேறு நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இப் பவளப்பாறைகளால், உலகில், 500 மில்லியன்  மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும், பயனடைகின்றனர். இப் பவளப் பாறைகளின் பொருளாதார மதிப்பு வருடத்துக்கு 375 மில்லியன் அமெரிக்க டாலர் வரை இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

Sponsored


பருவகால மாற்றங்களினால் ஏற்படும் வெப்பநிலை உயர்வின் காரணமாக பவளப்பாறை வெளிருதல் அதிகளவில் ஏற்பட்டு உலகின் அனைத்துப் பவளப்பாறை இடங்களையும் சேதப்படுத்துகின்றன. 2014–17-ம் ஆண்டுகளில், 36 சதவிகிதம் பவளப்பாறைகள் வெளிருதல் நோயால் சேதமடைந்துள்ளன. இது  உலகின் மூன்றாவது மிகப்பெரிய நிகழ்வு. இந்தியாவில் மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி, அந்தமான், லட்சத்தீவுகள் மற்றும் கட்ச் வளைகுடாப் பகுதிகளில் பவளப்பாறைகள் அதிகம் காணப்படுகின்றன.

Sponsored


பவளப்பாறைகளில் மன்னார் வளைகுடா பகுதியான,  ராமேஸ்வரம் முதல் தூத்துக்குடி வரையிலான பகுதிகளில் மட்டும், 21 பவளத்தீவுகள் உள்ளன. இவை அனைத்தும்  பல்வேறு இயற்கை காரணங்களாலும், முறையற்ற மீன்பிடி உத்திகள், நீர் மாசுபடுதல், முறையில்லாமல் வெட்டியேடுத்தல் போன்ற செயற்கை காரணங்களாலும் பாதிப்படைந்துள்ளன. 2016ல் வெளிருதல் நோயால், இங்குள்ள பவளப்பாறைகளில், 16.2 சதவிகிதம் பாதிப்படைந்தன.  இதனால்  பருவ  மாற்றத்தால் ஏற்படும்  வெளிருதல் நோயை  சரியான முறையில் அளவிடவும், கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள, தேசிய அளவிலான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை இன்று தூத்துக்குடியில் தொடங்கியது.

``பவளப்பறைகள் தீவிர எதிர்வினைத் திட்டம் என்ற பெயரில் நடைபெறும் இந்தப் பயிற்சிப் பட்டறையில், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து ஆராய்ச்சியாளர்கள், வல்லுநர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்தப் பயிற்சிப் பட்டறையில் வெளிருதல் நோயைச் சரியான முறையில் அளவிடுதல், கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் நடைபெறும். இதில் எடுக்கப்படும் முடிவுகள் இந்தியாவின் பவளப்பாறை மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கும்” எனப்  பயிற்சியில் கலந்துகொண்டவர்கள் கூறினர்.Trending Articles

Sponsored