``கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம்” - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி



வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம் என அ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் முடிந்த பின்னர் துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்தார். 

Sponsored


அ.தி.மு.க-வின் செயற்குழுக் கூட்டம் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இந்தச் செயற்குழுக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முக்கிய நிர்வாகிகள், எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதி மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Sponsored


அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அ.தி.மு.க-வின் இந்தச் செயற்குழு கூட்டம் அதிக முக்கியத்துவம் பெற்றது. இந்தக் கூட்டத்தில் அடுத்துவரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. செயற்குழுக் கூட்டம் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ``இன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். நேரம் வரும்போது கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கப்படும். நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை கூட்டணி அமைத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாபெரும் வெற்றிபெறுவோம். அது மாநில கட்சியாக இருந்தாலும், தேசியகட்சியாக இருந்தாலும் சரி” என்றார். பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்கப்படுமா என்ற கேள்விக்கு, அது தேர்தல் அறிவிக்கப்பட்டப் பின்னர்தான் முடிவு செய்யப்படும் என்றார். 

Sponsored




Trending Articles

Sponsored