தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து - ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதம்!Sponsoredகோவில்பட்டி அருகில் உள்ள கழுகுமலையில் உள்ள தனியார் தீப்பெட்டி ஆலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள மருந்து, தீக்குச்சிகள் முழுவதுமாக எரிந்து சேதமாயின.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள கழுகுமலை, வெங்கடேஸ்வரபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் கழுகுமலை புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறார். மேலும், இந்த ஆலையின் ஒரு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இன்று அதிகாலையில் இவரது தீப்பெட்டி ஆலையில் ஒரு பகுதியில் இருந்து அதிகமாக புகை வெளிவந்துள்ளது. இதைப் பார்த்ததும், உடனடியாக, ஆலைக்குள் சென்று பார்த்தபோது மருந்து, தீக்குச்சிகள் வைத்திருந்த அறையில் தீ கொளுந்து விட்டு எரிந்துகொண்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

Sponsored


Sponsored


இதைத் தொடர்ந்து கழுகுமலை தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் அளித்ததன் அடிப்படையில்,  தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால், தீ ஆலையின் மற்ற அறைகளுக்குச் செல்லவிடாமல் தடுக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இருப்பினும், அறையின் கட்டடம் சேதமடைந்தது மட்டுமில்லாமல், சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள மருந்து, தீக்குச்சிகள் எரிந்து சேதமாயின. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என  கூறப்படுகிறது. இந்தத் தீ விபத்து குறித்து கழுகுமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Trending Articles

Sponsored