வீட்டில் குவியும் ஆதரவாளர்கள்... ஆலோசனையில் அழகிரிSponsoredமதுரையில் இன்று தன் ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி ஆலோசனை நடத்தவுள்ளதால் சத்யசாய் நகரிலுள்ள அவர் வீட்டு முன் ஆதரவாளர்கள் குவிந்து வருகிறார்கள்.

கடந்த நான்கு வருடங்களாகத் தி.மு.க-விலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கும் மு.க.அழகிரி, கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு கட்சிக்குள் கலகக்குரல் எழுப்பி வருகிறார். கருணாநிதி சமாதியில் ஸ்டாலினுக்கு எதிராகப் பேசியவர் தி.மு.க தொண்டர்கள் தன் பக்கமிருப்பதாக கூறினார். இந்த நிலையில், செப்டம்பர் 5-ம் தேதி கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகப் பேரணி ஒன்றை நடத்த ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். இதற்காகப் பல மாவட்ட ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து வருகிறார்.

இந்த நிலையில் மதுரையில் தொடர்ந்து ஆதரவாளர் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர், இன்று காலை 10.30க்கு மணி
தமிழகத்தின் பல பகுதியிலிருந்து வந்திருக்கும் நிர்வாகிகளை சந்திக்கத் தொடங்கியுள்ளார். ``இந்தக் கூட்டம் எதற்காக?" என்று  அழகிரியிடம் கேட்டோம். ``கட்சியினருடன் ஆலோசனை செய்ய உள்ளோம். உங்களுக்கான தீனி செப்டம்பர் 5-க்குப் பின்னால் கிடைக்கும்" என்று பேச மறுத்துவிட்டார். 

Sponsored


ஆலோசனை கூட்டம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. தொண்டர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

Sponsored
Trending Articles

Sponsored